Vijay's Free Medical Camp : விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்கள்

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் (Vijay’s Free Medical Camp) நடத்தப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மிக்ஜாம் புயல் :

மிக்ஜாம் புயலால் சென்னை முழுவதும் தண்ணீர் தேங்கி, மக்கள் அன்றாட வேலைகளைச் செய்வதற்கும், அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கும் சிரமப்பட்டனர். இதையடுத்து, சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசின் நடவடிக்கையால், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்றுது. ஒரு சில பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திரும்பினாலும், சில பகுதிகளில் மக்கள் இன்னும் கழுத்தளவு தண்ணீரில் அலைந்தனர் என்பதே உண்மை. மடிப்பாக்கம், வேளச்சேரி பகுதிகளில் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் ஏராளமானோர் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.

இதையடுத்து, அவர்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு, தண்ணீர் வழங்கப்பட்டது. அவர்களுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் உதவி செய்தனர். அனைவரும் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் (Vijay’s Free Medical Camp) நடத்தப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Vijay's Free Medical Camp :

இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்தியில் கூறியிருப்பதாவது: மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் நலன் காக்கவும், காய்ச்சல் உள்ளிட்ட பருவமழை நோய்களைத் தடுக்கவும் 14.12.2023 அன்று 14.12.2023 அன்று காலை 8.05 மணி முதல் மதியம் 1.00 மணி வரை இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என 25 இடங்களில் பல்துறை டாக்டர்கள், செவிலியர்கள் பங்கேற்கும் இந்த மருத்துவ முகாம்கள் மூலம் குழந்தைகள், பெண்கள், முதியோர்களுக்கு தடுப்பு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது. பொதுமக்களின் நலன் காக்கும் இந்த மருத்துவ முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு விஜய் மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தான் அரசியலுக்கு வரப்போவதாக சூசகமாக கூறிய தளபதி விஜய், சமீபத்தில் நடந்த லியோ வெற்றி விழாவில் மீண்டும் அதை உறுதி செய்தார். இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் (Vijay’s Free Medical Camp) நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பலரது பாராட்டை பெற்று வருவதுடன் தமிழ்நாட்டின் அடுத்த CM நீங்க தான் என அவரது ரசிகர்கள் இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். 

Latest Slideshows

Leave a Reply