Vijay's Son Makes Directorial Debut : இயக்குனராக களமிறங்கிய விஜய் மகன், ஜேசன் சஞ்சய்...

Vijay's Son Makes Directorial Debut :

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக களமிறங்க உள்ளது குறித்து லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் லைக்கா நிறுவனர் சுபாஷ்கரன் கூறுகையில், ஸ்கிரிப்ட் பிடித்ததால் சஞ்சய்யை வைத்து படமெடுக்க முடிவு (Vijay’s Son Makes Directorial Debut) செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், சஞ்சய் தனது திரைக்கதையை சுதந்திரமாக உருவாக்க லைக்கா முழு ஒத்துழைப்பு அளித்துள்ளதாகவும் உற்சாகம் தெரிவித்துள்ளார். அப்பாவை வைத்து முதல் படத்தை இயக்க மாட்டேன் என்று பேரன் கூறியதால் எஸ்.ஏ.சந்திரசேகர் மகிழ்ச்சி, நடிகர் விஜய் கோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார். விஜய் தனது தந்தை பிரபல இயக்குனரான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய பல படங்களில் சிறுவனாக நடித்துள்ளார். விஜய் நாளைய தீர்ப்பு படத்தில் தன்னுடைய அப்பா இயக்கத்தில் அறிமுகமானார். தன்னுடைய தந்தையின் இயக்கம் மற்றும் தயாரிப்புலேயே களமிறங்கிய விஜய் சில படங்களுக்குப் பிறகு நடிகராக ஏற்கப்பட்டு மற்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

இந்நிலையில் விஜய் தற்போது கோலிவுட்டின் மிகப்பெரிய ஹீரோவாக கொண்டாடப்பட்டு ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். அவரது படங்கள் மோசமாக இருந்தாலும், வசூல் வேட்டையில் சாதனை படைத்துவிடும். விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இதற்கு சமீபத்திய உதாரணம் பீஸ்ட். நெல்சன் இயக்கிய இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இப்படத்தை தொடர்ந்து குடும்ப செண்டிமெண்ட்டை மையமாக வைத்து வாரிசு படத்தை கொடுத்த விஜய், தற்போது ஆக்ஷன் படமான லியோவில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விஜய் கேங்ஸ்டர் வேடத்தில் நடித்துள்ள நிலையில், அக்டோபர் 19ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் நிலையில், ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கவுள்ள நிலையில், விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், விஜய்யின் மகன் ஜேசன் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் (Vijay’s Son Makes Directorial Debut) நுழைந்துள்ளார். முன்னதாக குறும்படம் இயக்கி தன்னை நிரூபித்த அவர், தற்போது லைகா தயாரிப்பில் புதிய படத்தை இயக்க (Vijay’s Son Makes Directorial Debut) கமிட்டாகியுள்ளார். இதனை லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், ஜேசன் சஞ்சய் பற்றி, அவரது தாத்தாவும், விஜய்யின் தந்தையுமான இயக்குனரான எஸ்.ஏ.சி. அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இயக்குனராகப் போகிறேன் என்று பேரன் சொன்னபோது, உனக்கெண்டாடா நீ டைரக்ட் செய்ய நினைத்தால் பெரிய நடிகர் உன் வீட்டிலேயே உள்ளார் என்று தான் கூறியதாக குறிப்பிட்டுள்ளார். அவரை வைத்து படம் எடுத்தால் படம் ஓடிவிடும் என்று கூறிய நிலையில் அதற்கு பதில் அளித்த சஞ்சய், இல்லை தாத்தா, விஜய் சேதுபதி தான் தனது முதல் ஹீரோ என்று கூறியதாக தெரிவித்தார். தான் இயக்குனராக தன்னை நிரூபித்த பின்பே, அப்பாவை வைத்து படமியக்கும் சஞ்சயின் தன்னம்பிக்கையை எஸ்.ஏ.சந்திரசேகர் சுட்டிக்காட்டினார். சஞ்சய் தனது தந்தையுடன் படம் எடுப்பதற்கான நம்பிக்கையையும் எஸ்.ஏ.சி சுட்டிக்காட்டினார். அந்த பேட்டியில் இதுதான் தன்னுடைய ரத்தம் என்றும், சஞ்சயை நினைத்து பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply