Vikram Acted in Thalaivar 170: ரஜினிக்கு வில்லனாகும் சியான் விக்ரம்

திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் சியான் விக்ரம். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்து அசத்திய அசத்திய சியான் விக்ரம் அடுத்ததாக பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். துருவ நட்சித்திரம் படத்தை விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ள நிலையில் விக்ரமுக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் அந்நியன் மற்றும் ஐ படங்களில் நடித்த சியான் விக்ரம், ரஜினியின் 2.0 படத்திலேயே வில்லனாக நடிக்க முடியாது என அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் என அப்போது பேச்சுக்கள் அடிபட்டன.

ரஜினிகாந்த்

திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் ரஜினிகாந்த். இவர் ஐஸ்வர்யா இயக்கத்தில் விகாரந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’. இத்திரைப்படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் ரஜினி ‘மொய்தீன் பாய்’ என்கின்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வில்லனாகும் சியான் விக்ரம்

இந்நிலையில் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போகும் படத்தில் வில்லனாக நடிக்க சியான் விக்ரமிடம் ஜெய்பீம் படத்தின் இயக்குனர் வீட்டிற்கே சென்று பேச்சு வார்த்தைகள் நடத்தியதாகவும் பெரும் தொகையை சம்பளமாக தர லைகா நிறுவனம் சொல்லி உள்ள நிலையில் தலையை அசைக்கலாமா? வேண்டாமா? என்ற யோசனையில் சியான் விக்ரம் உள்ளதாக கூறப்படுகின்றனர்.

முன்னணி நடிகர்கள் தங்கள் படங்களில் இன்னொரு ஹீரோவை வில்லனாக நடிக்க வைக்க ஆரம்பித்துள்ள நிலையில், ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிக்க சியான் விக்ரமை அணுகியுள்ளனர். லைக்கா தயாரிப்பில் பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 படங்களில் நடித்த சியான் விக்ரமுக்கு வில்லனாக நடிக்க 50 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டள்ளது. ஏற்கனவே கமலுக்கு வில்லனாக ரோலக்ஸ் ஆக நடிக்க முடியாது என்று சொன்ன நிலையில், அந்த வாய்ப்பு சூர்யாவுக்கு சென்றது. ரஜினிக்கு வில்லனாக நடிக்க சியான் விக்ரம் 50 கோடி ரூபாய் சம்பளத்திற்கு சம்மதிப்பாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply