Vikram Served Food For Thangalaan Cast : தங்கலான் படக்குழுவினருக்கு விருந்து வைத்த விக்ரம்

தங்கலான் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக விக்ரம் தங்கலான் படக்குழுவினர் அனைவரையும் வரவழைத்து விருந்து (Vikram Served Food For Thangalaan Cast) கொடுத்துள்ளார்.

தங்கலான் :

  • சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது. சீயான் விக்ரம் போன்ற ஒரு நட்சத்திர நடிகரின் அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பைக் கண்டு அனைத்து ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.
  • தங்கலான்‘ படத்தின் வெற்றிக்காக உழைத்த நடிகர், நடிகைகள், உதவி இயக்குநர்கள், கலை இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் சீயான் விக்ரம் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

Vikram Served Food For Thangalaan Cast - படக்குழுவினருக்கு விருந்தளித்த விக்ரம் :

இதையடுத்து, சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதான வளாகத்தில் உள்ள திரையரங்கிற்கு வருகை தந்த 500க்கும் மேற்பட்டோரை சீயான் விக்ரம் வரவேற்றார். பின்னர் சீயான் விக்ரம் முதலில் படத்தில் கடுமையாக உழைத்ததற்காக அங்கு வந்த அனைவருக்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்தார். இதற்கு முன் சீயான் விக்ரம், ‘தங்கலான்’ படக்குழுவினருக்கு மிகவும் பிடித்த உணவுகளை கேட்டு தேர்வு செய்து பிரபல சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜிடம் வழங்கினார். அவருடைய கைப்பக்குவத்தில் உருவான சிறப்பு விருந்தினை தன்னுடைய நன்றியினை தெரிவிக்கும் வகையில் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் விக்ரம் தனது கையாலேயே உணவினை (Vikram Served Food For Thangalaan Cast) பரிமாறினார். விக்ரமின் இந்த செயலால் படத்தில் பணியாற்றிய அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக தொழிலாளர் குடும்ப உறுப்பினர்கள் விக்ரமுடன் பேசியதோடு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

மேலும் படத்தில் நடித்த நடிகைகள் மாளவிகா மோகனன், பார்வதி, நடிகர் பசுபதி, படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் திருமதி.நேகா ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் தந்தை கே.ஈஸ்வரன், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தலைமை அதிகாரி தனஞ்செயன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொதுவாக ஒரு படம் வெற்றி பெற்றால் படக்குழுவினர் ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிப்பது வழக்கம். ஆனால் சீயான் விக்ரமின் தங்கலான் பட வெற்றிக்காக படத்தில் கடுமையாக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தது மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து, விருந்தோம்பல் செய்து, நன்றி தெரிவித்தது அனைவரது கவனத்தையும் கவர்ந்ததுடன் ஆச்சரியத்தையும் அளித்தது. திருமணத்தில் நடத்தப்படும் விருந்தை விட விக்கிரமின் விருந்து தடபுடலாக இருந்ததாக அனைவரும் வாழ்த்தி விடைபெற்றனர்.

Latest Slideshows

Leave a Reply