Vikram Tamil Remake Of Margo : மார்கோ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் சியான் விக்ரம்

உன்னி முகுந்தன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மலையாளப் படமான மார்கோ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் சியான் விக்ரம் (Vikram Tamil Remake Of Margo) நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து  வருகிறார். கடந்த ஆண்டு ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்த தங்கலான் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தங்கலான் படத்தை தொடர்ந்து விக்ரம் தற்போது எஸ்.யு அருண்குமார் இயக்கத்தில் வீரதீர சூரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனை அடுத்து மடோன் அஸ்வின் இயக்க இருக்கும் படத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார் தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி மலையாளத்தில் உன்னி முகுந்தன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மார்கோ படத்தின் (Vikram Tamil Remake Of Margo) தமிழ் ரீமேக்கில் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மார்கோ ரீமேக்கில் விக்ரம் (Vikram Tamil Remake Of Margo)

மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடித்து கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி வெளியான திரைப்படம் மார்கோ. சமீப காலமாக ஆக்சன்,  த்ரில்லர் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. கன்னடத்தில் KGF, சலார் போன்ற படங்கள் பான் இந்திய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளன. அதேபோல் தமிழில் லியோ போன்ற படங்களும் அதிக கவனம் பெற்றுள்ளது. தற்போது மலையாளத் திரையுலகில் ஆக்‌ஷன் படங்கள் அதிகளவில் வெளியாக தொடங்கியுள்ளன. அந்த வகையில் மார்கோ திரைப்படம் மலையாள ரசிகர்கள் (Vikram Tamil Remake Of Margo) மட்டுமின்றி இந்திய அளவில் பரவலான ரசிகர்களையும் சென்றடைந்துள்ளது. தற்போது இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளது. மேலும் இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் சியான் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லரில் விக்ரமை பார்க்க நீண்ட நாட்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு இந்தத் தகவல் உற்சாகத்தை அளித்துள்ளது.

வீர தீர சூரன்

தற்போது சியான் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படத்தில் துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் (Vikram Tamil Remake Of Margo) எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தை எச் ஆர் பிக்சர்ஸ் சார்பில் சிபு தமீம் தயாரித்துள்ளார். மேலும் இப்படம் ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் ஜனவரி 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

Latest Slideshows

Leave a Reply