Virat Kohli Crossing 9000 Runs in Test cricket : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 9000 ரன்களை கடந்து வீராட் கோலி சாதனை..!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 9000 ஆயிரம் ரன்களை கடந்த  4-வது இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை நட்சத்திர வீரர் விராட் கோலி (Virat Kohli Crossing 9000 Runs in Test cricket) படைத்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது  இன்னிங்ஸில் அரைசதம் எடுத்தபோது இந்த சாதனையை கோலி படைத்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நேற்றைய முன்தினம் தொடங்கியது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் வெறும் 40 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் நியூசிலாந்து அணி 402 ரன்கள் குவித்தது.

இதன் மூலம் 356 ரன்களுடன்  நியூசிலாந்து அணி முன்னிலையில் இருந்தது. மேலும் இதனால் இந்திய அணி டிரா செய்ய போராடுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எழுந்தது. இந்நிலையில் 2-வது இன்னிங்ஸில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 72 ரன்கள் எடுத்த நிலையில் அஜாஸ் படேல் வீசிய பந்தை சிக்ஸ் அடிக்க முயன்று ஜெய்ஸ்வால் வெறும் 35 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பிறகு கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இணைந்து விராட் கோலி அதிரடியாக விளையாடினர். மறுபுறம் சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா அரைசதத்துடன் வெளியேறினார்.

Virat Kohli Crossing 9000 Runs in Test cricket

இதை தொடர்ந்து விராட் கோலியும் சர்ஃபராஸ் கானும் இணைந்து அதிரடியாக ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடிய சர்ஃபராஸ் கான் வெறும் 42 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸருடன் அரைசதத்தை பூர்த்தி செய்தார். மறுபுறம் சிறப்பாக ஆடிய விராட் கோலி 70 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இந்த ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கோலி அடிக்கும் முதல் அரை சதம் இதுவாகும். இதனை தொடர்ந்து 53 ரன்கள் எடுத்த போது  விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 9000 ரன்களை (Virat Kohli Crossing 9000 Runs in Test cricket) கடந்து புதிய வரலாற்று சாதனை படைத்தார்.

4-வது இந்திய வீரர்

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன் இந்திய அணியில் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், கேப்டன் ராகுல் டிராவிட் ஆகிய 3 பேர் மட்டுமே 9 ஆயிரம் ரன்களை குவித்துள்ளனர். இந்த வரிசையில் 4-வது வீரராக விராட் கோலி (Virat Kohli Crossing 9000 Runs in Test cricket) இணைந்துள்ளார். மேலும் இந்த 4 பேரில் மிகவும் தாமதமாக 9000 ரன்களை எடுத்தவர் என்ற மோசமான சாதனையை கோலி படைத்துள்ளார். விராட் கோலிக்கு 9000 ரன்களை அடிப்பதற்கு மொத்தம் 197  இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply