Virat Kohli New Record : ICC தொடர்களில் அதிக ரன்கள் குவித்து விராட் கோலி சாதனை!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் ஒரு பிரத்யேக பட்டியலில் சச்சினை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்துள்ளார் (Virat Kohli New Record) விராட் கோலி.

2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தங்களுடைய முதல் போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இரண்டு சமபலம் கொண்ட அணிகளுக்கு இடையேயான போட்டி என்பதால் விறுவிறுப்பான நடந்தது.

ஜடேஜாவை சுழலில் சிக்கிய ஆஸ்திரேலியா

சென்னையில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கத்திலேயே நல்ல ஃபார்மில் இருக்கும் மிட்சல் மார்ஸை 0 ரன்னில் வெளியேற்றிய ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். வெறும் 5 ரன்னுக்கே முதல் விக்கெட்டை இழந்தாலும் அதற்கு பிறகு கைக்கோர்த்த டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அடிக்க வேண்டிய பந்துகளை மட்டும் அட்டாக் செய்த இவர்கள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை செட்டில் ஆக விடாமல் சிறப்பாக விளையாடினர். நிலைத்து நின்ற பிறகு அடுத்தடுத்து பவுண்டரிகளாக விரட்ட ஆரம்பித்த இந்த ஜோடி, 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு ஆஸ்திரேலியாவை சரியான பாதைக்கு அழைத்து சென்றது. தொடர்ந்து பந்துவீச வந்த குல்தீப் யாதவ் ஒருவழியாக 41 ரன்களில் டேவிட் வார்னரை வெளியேற்றி வெற்றிகரமாக இந்த ஜோடியை பிரித்து வைத்தார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் 3வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த ஸ்மித் மற்றும் லபுசனே இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் போட்டு விளையாடினார்கள். பிறகு பந்துவீச வந்த ஜடேஜா சுழல் பந்தில் ஒரு மாயாஜால வித்தையில் ஸ்மித்தின் ஸ்டம்பை தகர்த்தார். அடுத்தடுத்து லபுசனே, அலக்ஸ் கேரி என இருவரையும் ஒரே ஓவரில் வெளியேற்றிய ஜட்டு ஆஸ்திரேலியா அணியை கட்டுக்குள் கொண்டுவந்தார். முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா 199 ரன்கள் மட்டுமே எடுத்தது.

3 இந்திய டாப் ஆர்டர் வீரர்கள் டக் அவுட்

200 ரன்கள் என்ற சிறிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு தொடக்கத்தில் பெரிய அதிர்ச்சியை வைத்திருந்தனர் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள். முதல் ஓவரிலேயே இஷான் கிஷானை டக் அவுட்டில் ஸ்டார்க் வெளியேற்ற அடுத்த ஓவரில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரையும் அடுத்தடுத்து 0 ரன்களில் வெளியேற்றி அசத்தினார் ஹசல்வுட். வெறும் 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு மோசமான சாதனையை பதிவுசெய்தது. மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நம் இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் 3 பேரும் 0 ரன்னில் வெளியேறுவது இதுவே முதல்முறையாகும்.

3 இந்திய டாப் ஆர்டர் வீரர்கள் டக் அவுட்

200 ரன்கள் என்ற சிறிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு தொடக்கத்தில் பெரிய அதிர்ச்சியை வைத்திருந்தனர் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள். முதல் ஓவரிலேயே இஷான் கிஷானை டக் அவுட்டில் ஸ்டார்க் வெளியேற்ற அடுத்த ஓவரில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரையும் அடுத்தடுத்து 0 ரன்களில் வெளியேற்றி அசத்தினார் ஹசல்வுட். வெறும் 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு மோசமான சாதனையை பதிவுசெய்தது. மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நம் இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் 3 பேரும் 0 ரன்னில் வெளியேறுவது இதுவே முதல்முறையாகும்.

Virat Kohli New Record - விராட் கோலி சாதனை

தொடர்ந்து 3 விக்கெட்டுகளை இந்தியா இழந்தாலும் சேஸ் மாஸ்டரான விராட் கோலி நிலைத்து நின்று ஆடினர். 116 பந்துகளில் 6 பவுண்டரிகள் விளாசி 85 ரன்கள் குவித்தார் விராட் கோலி. ICC தொடர்களில் அதிக ரன்களை எடுத்த இந்திய வீரராக தற்போது (Virat Kohli New Record) மாறியுள்ளார். ஏற்கனவே ICC தொடர்களில் 2719 ரன்களை (58 போட்டிகள்) குவித்திருந்த சச்சின் டெண்டுல்கர் அதிக ரன்கள் குவித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். மேலும் 2720* ரன்கள் (64 போட்டிகள்) கடந்துள்ள விராட் கோலி சச்சினை பின்னுக்கு தள்ளி ICC உலகக்கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் குவித்த வீரராக விராட் கோலி (Virat Kohli New Record) மாறியுள்ளார். இந்த பட்டியலில் அடுத்த இடத்தில் இந்திய அணியின் ரோகித் சர்மா 2422 ரன்களுடன் (64 போட்டிகள்) மூன்றாவது வீரராக இருக்கிறார்.

இந்தியா முதல் வெற்றியை பதிவு செய்தது

கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரின் இணை நங்கூரம் போல் நிலைத்து நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றது. 41.2 ஓவர்களில் 201 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது.

கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 97 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply