Virat Kohli Not Playing 3rd ODI: இந்திய வீரர்களுடன் கோலி பயணிக்கவில்லை...

Virat Kohli Not Playing 3rd ODI :

ஏற்கனவே நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் தற்போது ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.  இதில் இந்திய அணி விளையாடிய முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் ரோகித் மற்றும் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டாவது போட்டியில் இந்திய அணி இளம் வீரர்களை நம்பி இறங்கியது. 181 ரன்கள் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது.  இதனால் இரண்டாவது போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதனால் உலககோப்பை தகுதி போட்டியில் கூட தகுதி பெறாத அணிக்கு எதிராக இந்திய அணி தோற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்குப் பழிவாங்கும் விதமாக இன்று கடைசி போட்டி நடைபெற உள்ளது.

இதனால் கடைசி போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி பயணம் மேற்கொண்டது. இதில் இந்திய அணி நட்சத்திர வீரர்கள் விராட் கோலி பயணிக்கவில்லை. இது குறித்து ரசிகர்களிடையே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இரண்டாவது போட்டியில் இந்திய அணி விளையாடும் வீரர்களில் விராட் கோலி இடம் பெறவில்லை. அவரை பெஞ்ச் செய்ததால் தான் இந்திய அணி தோற்றது என்றும் ரசிகர்கள் விமர்சித்துள்ளனர். இது மட்டுமல்லாமல் இசன் கிசான் தவிர மற்ற எந்த வீரர்களும் சரியாக விளையாடவில்லை. முக்கியமாக கேப்டன் பாண்டியாவின் ஆட்டம் மோசமாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் கோப்பையை நிர்ணயிக்கக்கூடிய கடைசிப் போட்டி இன்று லாரா மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் சென்ற போட்டியில் இருந்து இந்த மைதானம் பயணம் செய்ய இந்திய அணி வீரர்கள் தயாராக இருந்தனர். கோலி இவர்களுடன் பயணிக்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

விராட் கோலி இல்லை :

இதேபோன்று இந்திய அணி வீரர்களை வரவேற்பதற்காக பிராவோ வெளியிட்ட வீடியோவிலும் விராட் கோலி இடம்பெறவில்லை. இதனால் விராட் கோலி மட்டும் ஏன் இல்லை என்ற கேள்வி கோலி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இரண்டாவது போட்டியில் விளையாட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் கோலி இவர்களுடன் பயணிக்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் மூன்றாவது நாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தால் இந்திய அணி தொடரை இழக்கும் அபாயம் உள்ளது. இதனால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரையும் களம் இறக்க வாய்ப்பு உள்ளது என தெரிகிறது.

Latest Slideshows

Leave a Reply