Virat Kohli To Miss 1st T20I : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் விராட் கோலி விளையாட மாட்டார்

மொஹாலி :

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி விளையாட மாட்டார் (Virat Kohli To Miss 1st T20I) என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார். அதன்பிறகு சதம் அடித்து, மீண்டும் பீஸ்ட் மோடுக்கு வந்துள்ளார். இந்நிலையில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது.

Virat Kohli To Miss 1st T20I :

டி20 உலகக் கோப்பை 2022 தோல்விக்குப் பிறகு, விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதைத் தவிர்த்தார். அதன் பிறகு அவர் ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடினார், ஆனால் இந்திய அணிக்காக ஒரு டி20 போட்டியில் கூட விளையாடவில்லை. 14 மாதங்களுக்கு பிறகு மீண்டும் டி20 கிரிக்கெட்டில் விளையாட விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்த டி20 தொடரில் விராட் கோலி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று மொஹாலியில் நடைபெறும் முதல் டி20 போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ராகுல் டிராவிட் கூறுகையில், தனிப்பட்ட காரணங்களால் விராட் கோலி இந்திய அணியுடன் மொஹாலிக்கு (Virat Kohli To Miss 1st T20I) செல்லவில்லை.

விராட் கோலியும் தொடக்க போட்டிக்கு முந்தைய பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. இதன் காரணமாக இன்றைய போட்டியில் விராட் கோலி விளையாட மாட்டார். இதன் காரணமாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, யாஷ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள். இந்திய அணியின் தேவைக்கேற்ப விளையாட வீரர்கள் தயாராக உள்ளனர். கடந்த சில தொடர்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்துள்ளார். ஜெய்ஸ்வால்-ரோகித் சர்மா விளையாடுவதால், இந்திய அணி இடது-வலது கலவையில் விளையாட முடியும் என்றும் அவர் கூறினார். தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு முன் விராட் கோலி திடீரென குடும்பத்தினரை சந்திக்க சென்றார். இப்போது முதல் போட்டியில் இல்லாதது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply