Virat Kohli Vs Sachin Tendulkar: சச்சினுக்கும் கோலிக்கும் அப்படி என்ன பெரிய வித்தியாசம்...

Virat Kohli Vs Sachin Tendulkar :

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி. இவர்களுக்கு சதங்கள், பேட்டிங் ரெக்கார்டுகள் என பல்வேறு ஒற்றுமைகள் இருந்தாலும் ஒரு சில வித்தியாசமான விஷயங்களும் உள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரை சுனில் கவாஸ்கர் அவருக்கு பிறகு சச்சின் டெண்டுல்கர் தற்போது விராட் கோலி என 50 ஆண்டுகளாக உலகம் போற்றும் பேட்ஸ்மேன்களை உருவாக்கி வருகிறது. இந்த வீரர்களின் சச்சின் டெண்டுல்கர் மட்டும் அதிகபட்சமாக 24 வருடம் விளையாடி உள்ளார். இவருக்குப் பின் வந்த விராட் கோலி சச்சின் அனைத்து சாதனைகளையும் முறியடித்து வருகிறார். ஆனால் இவர்களிடம் இவ்வளவு ஒற்றுமைகள் இருந்தாலும் அடிப்படை விஷயங்களில் சில வேற்றுமைகள் உள்ளன.

குறிப்பாக விளையாடும் ஸ்டைலில் சச்சின் மற்றும் கோலி இடையே வித்தியாசம் பெரிதும் உள்ளது. சச்சின் டெண்டுல்கர் கிளாசிக்காக விளையாடும் வகையில் சிறந்த பேட்ஸ்மேன் ஆக உள்ளார்.

அதே போன்று ஸ்வீப் ஷாட், கவர் டிரைவ் என்று புதிய ஷார்ட்டுகளை தன்னுடைய உடலை அமைப்புக்கேற்ப விளையாடக் கூடியவர். ஆனால் விராட் கோலி தற்போது உள்ள பிளேயர்களை போன்று மிகவும் ஆக்ரோஷமான ஆட்டத்திற்கு பேர் போனவர்.

பெரும்பாலும் ஆப்சைடு திசையில் அதிகமாக ரன்களை குவிக்க கூடியவர். ஆனால் விராட் கோலி கொஞ்சம் கூட மற்ற வீரர்களை போன்று ஸ்வீப் ஷாட் ஆட மாட்டார். என்னதான் பயிற்சிகளின் போது ஸ்வீப் ஷாட் விளையாடினாலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவர் நேராக நின்று விளையாடக் கூடியவர். இதேபோன்று சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் உலகில் உச்சத்தில் இருந்தாலும் அவர் ஃபிட்னஸ் பற்றி பெரிதாக கவலை கொண்டதில்லை. இதேபோன்று டேஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை. ஆனால் விராட் கோலி அதிவேகமான ரன்கள் குவிப்பதில் சாதனை படைத்துள்ளார். இதேபோன்று இருவீரர்களும் இந்திய அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டுள்ளனர்.

ஆனால் அந்த நேரத்தில் கூட சச்சின் டெண்டுல்கர் எப்போதும் அமைதியாகவே செயல்படுவார். இதனால் வெகு விரைவில் கேப்டன் பட்டியலில் இருந்து வெளியேறினார். அந்தப் பக்கம் பார்த்தால் விராட் கோலி வெற்றியோ தோல்வியோ ஆக்ரோஷமாக விளையாடி எதிரணி வீரர்களை அலறவிட்டார்.

சச்சின் சாதனை :

இதுவரை விராட் கோலி மூன்று உலகக் கோப்பை தொடர்களை விளையாடி உள்ளார். ஆனால் சச்சின் டெண்டுல்கர் ஆறு உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்றுள்ளார். இதன் மூலம் அதிக உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்ற வீரர் என்னும் சாதனையும் படைத்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply