Virat Kohli's Birthday : கோலியின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாட உள்ள கங்குலி குடும்பத்தினர்

கொல்கத்தா :

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன்கள் பட்டியலில் கங்குலியும், விராட் கோலியும் நிச்சயம் இடம்பிடித்துள்ளனர். கங்குலி பிசிசிஐ தலைவராக இருந்தபோது கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் கங்குலிக்கும், விராட் கோலிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக பலரும் நம்பினர். மேலும் கோலியின் ரசிகர்கள் கங்குலியை வில்லனாக சித்தரித்து வசைபாடினர். இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கங்குலியும், விராட் கோலியும் கைகுலுக்காமல் சென்றது அவர்களுக்கு இடையேயான பிரச்சனையை உறுதி செய்தது. ஆனால், அதே சீசனில் பெங்களூருவில் நடந்த போட்டியின் போது கங்குலியும், விராட் கோலியும் கைகுலுக்கி, கட்டிப்பிடித்து கொண்டனர்.

Virat Kohli's Birthday :

இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை முடிந்ததாக தெரிகிறது. மேலும் கங்குலியும் அவ்வப்போது விராட் கோலியை பாராட்டி வருகிறார். இந்நிலையில் ஐந்தாம் நாள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து விளையாட உள்ளது.

Virat Kohli’s Birthday : விராட் கோலியின் பிறந்தநாள் நவம்பர் 5ஆம் தேதி வருவதால், கோலியின் பிறந்தநாளை முன்கூட்டியே கொண்டாட பெங்கால் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. கங்குலியின் சகோதரர் சினேசிஸ் கங்குலி பெங்கால் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டியை காண 70 ஆயிரம் ரசிகர்கள் வருவார்கள்.

அவர்கள் அனைவருக்கும் கோலியின் உருவம் பொறித்த முகமூடியை வழங்க முடிவு செய்துள்ளோம். அன்றைய தினம் விராட் கோலி பேட்டிங் செய்ய வரும்போது, ​​அவரது ரசிகர்கள் முகமூடியை அணியுமாறு அறிவிப்போம். மேலும் அன்றைய தினம் விராட் கோலியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாட முடிவு (Virat Kohli’s Birthday) செய்துள்ளோம். இதற்கு ஐசிசி அனுமதி அளித்தால், விராட் கோலியின் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாட முடிவு செய்துள்ளோம். உலகக் கோப்பையின் போது விராட் கோலியின் பிறந்தநாளை கங்குலி குடும்பத்தினர் கொண்டாட உள்ளது (Virat Kohli’s Birthday) கோலி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply