Virudhunagar New Method Teaching : ஆஷா தேவி டிஜிட்டல் கற்பித்தலுக்காக கனவு ஆசிரியர் விருது பெற்றுள்ளார்

Virudhunagar New Method Teaching - விருதுநகரில் ஆஷா தேவி டிஜிட்டல் கற்பித்தலுக்காக 2023-ஆம் ஆண்டு கனவு ஆசிரியர் விருது பெற்றுள்ளார் :

தமிழ்நாடு அரசு ஆனது ஒவ்வொரு ஆண்டும் கற்பித்தலில் புதிய முறையை கையாண்டு வரும் ஆசிரியர்களை ஊக்குவிக்க கனவு ஆசிரியர் விருதை வழங்கி வருகின்றது. இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் ஆஷா தேவி டிஜிட்டல் கற்பித்தலுக்காக (Virudhunagar New Method Teaching) 2023-ஆம் ஆண்டு கனவு ஆசிரியர் விருதை பெற்றுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆஷா தேவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

புதிய முறையை கையாண்டு கற்பித்தல் (New Method Teaching) :

உலகத்தில் இன்றைய காலகட்டத்தில் விசுவல் மீடியா (Visual Media) ஆனது கோலோச்சி வருகிறது. கற்றலினும் கேட்டல் நன்று என்றும் அதையும் தாண்டி இன்றைய உலகத்தில் கேட்டலினும் பார்த்தல் நன்று என்ற நிலை வந்துவிட்டது. செய்திகளை பத்திரிக்கைகளில் படிப்பதை காட்டிலும், வானொலிகள் மூலம் காதால் கேட்பதை விடவும் காணொளியாக கண்ணால் காண்பதன் மூலம் செய்தியை எளிதாக புரிந்து கொள்ள முடியும் என்பதாலே விசுவல் மீடியா இன்று கோலோச்சி வருகிறது. Mobile Phone வருகைக்கு பிறகு இன்று அனைத்தும் Youtube-ல் இருக்கும் நிலை ஆனது ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்னும் பழைய கற்றல் முறையே தொடர்ந்து வந்தால் சரிபட்டு வராது என்று கருதிய ஆசிரியர் ஆஷா தேவி டிஜிட்டல் கற்பித்தல் முறைக்கு (Virudhunagar New Method Teaching) மாற்றி மாணவர்களுக்கு பாடம் கற்பித்துள்ளார்.

ஸ்மார்ட் டிவியில் அறிவியல் பாடம் - ஆசிரியர் ஆஷா தேவி கருத்து :

தான் பணியாற்றும் பள்ளியில் ஸ்மார்ட் டீவி இருப்பதால் அதை பயனுள்ளதாக பயன்படுத்த ஆசிரியர் ஆஷா தேவி எண்ணினார். ஆசிரியர் ஆஷா தேவி அறிவியல் பாடத்திற்கான வீடியோக்களையும் மற்றும் பதிவுகளையும் தானே தயார் செய்து எடுத்து வந்து டீவியில் போட்டு பாடம் எடுத்து வருவதாக (Virudhunagar New Method Teaching) தெரிவித்தார். அதே சமயம் வகுப்பறை கற்றல் என்றாலே அங்கு கரும்பலகைக்கு தான் முக்கியத்துவம் என்பதால், கரும்பலகையிலும் தான் பாடம் எடுத்து வருவதாகவும் ஆசிரியர் ஆஷா தேவி கூறினார். அதனால் ஆசிரியர் ஆஷா தேவி தான் எப்பவுமே முதலில் கரும்பலகையில் பாடம் எடுத்து விட்டு பின்பு அதே தலைப்பை டீவியில் போட்டு விளக்குவதாக கூறினார். மாணவர்கள் இதன் மூலம் பாடத்தை எளிதாக புரிந்து கொள்ள முடியும் என்று ஆஷா தேவி கூறினார். தனது முயற்சிக்கான அங்கீகாரமாக கனவு ஆசிரியர் விருதை ஆஷா தேவி நினைப்பதாகவும் இதற்கு உதவியாக இருந்த அனைவருக்கும் தான் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

Latest Slideshows

Leave a Reply