Vishal Thanks Vijay For Donating : விஜய்யின் நிதியுதவிக்கு நன்றி தெரிவித்த விஷால்

தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக நாசரும், பொது செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தியும் செயல்பட்டு வருகின்றனர். இந்த சங்கத்திற்கு கட்டிடம் கட்ட கடந்த சில வருடங்களாக நடிகர் சங்க நிர்வாகிகள் முயற்சி எடுத்து வந்தனர். ஆனால், போதிய பணம் இல்லாததால், சங்கம் கட்டும் பணி தாமதமாகி வருகிறது. சில நாட்களுக்கு முன், இந்த சங்க கூட்டத்தில், கட்டடம் கட்ட, 40 கோடி ரூபாய் வங்கிக்கடன் பெற முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வங்கி கடனை அடைக்க, கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக இந்த சங்க கட்டிடம் கட்டுவதற்கு நடிகர்கள் கார்த்தி, சூர்யா, விஷால் உள்ளிட்டோர் நிதியுதவி அளித்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசனும் ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார். இந்த சங்கத்தின் கட்டிட பணிக்காக நடிகரும் அமைச்சருமான உதயநிதி முன்பு ஒரு கோடி ரூபாய் வழங்கி உள்ளார்.

Vishal Thanks Vijay For Donating :

இந்நிலையில் நடிகர் விஜய்யும் சங்கத்தின் கட்டிட பணிக்கு நன்கொடையாக ஒரு கோடி ரூபாயை வழங்கினார். இந்நிலையில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் விஜய்க்கு தனது நன்றியையும், பாராட்டுகளையும் (Vishal Thanks Vijay For Donating) தெரிவித்துள்ளார். Thank You என்பது இரண்டு வார்த்தைகள் தான், ஆனால் ஒருவர் தனது இதயபூர்வமாக உதவி செய்யும்போது, ​​அந்த வார்த்தைகள் நிறைய அர்த்தங்களை தெரிவிக்கின்றன. எனக்கு பிடித்த நடிகர் தளபதி விஜய் அண்ணன் நடிகர் சங்க கட்டிட பணிக்காக ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். இதற்கு நன்றி. God Bless You விஜய் என்றும் விஷால் கூறியுள்ளார். தொடர்ந்து, விஜய்யின் ஆதரவு இல்லாமல் இந்த நடிகர் சங்கக் கட்டிடம் முழுமையடையாது என்பது எங்களுக்குத் தெரியும் என்றார். இந்த கட்டிடம் கட்டி முடிக்க விஜய் நிதியுதவி அளித்தது பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளதாக கூறியுள்ள விஷால், தற்போது விஜய் ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால் ‘நன்றி நண்பா’ என விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில் விஜய்க்கு (Vishal Thanks Vijay For Donating) நன்றி தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply