Vishal's Latest Tweet About CBFC Case : ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பேன் என ட்விட்

Vishal's Latest Tweet About CBFC Case :

மார்க் ஆண்டனியின் இந்தி பதிப்பிற்கு சென்சார் சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட வழக்கில் (Vishal’s Latest Tweet About CBFC Case) சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜரான விஷால், ஊழலுக்கு எதிராக குரல் எழுப்புவேன் என்று ட்வீட் செய்துள்ளார்.

மார்க் ஆண்டனி :

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், மார்க் ஆண்டனி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தரமான ஓப்பனிங்கைக் கொடுத்தது. இந்நிலையில் இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். விஷால், எஸ்.ஜே.சூர்யாவுடன் இருவரும் இரட்டை வேடங்களில் நடித்து ரசிகர்களுக்கு விருந்தளித்தனர். இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், காலப் பயணத்தை பின்னணியாகக் கொண்டு அறிவியல் புனைகதை ஜானரில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மார்க் ஆண்டனியின் ட்ரெய்லர் வெளியானதில் இருந்ததே படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்தது.

அதன்படி மார்க் ஆண்டனி படம் முதல் நாளிலேயே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மார்க் ஆண்டனி பாக்ஸ் ஆபிஸ் வசூல் நன்றாக இருந்தது. ஒரு பக்கா கமர்ஷியல் ஸ்கிரிப்ட் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் அற்புதமான நடிப்பு மார்க் ஆண்டனிக்கு பிரமாண்டமான ஓப்பனிங்கைக் கொடுத்தது. இதனால் முதல் நாளில் 10 கோடிக்கு மேல் வசூல் செய்தது. 30 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் சூப்பர் ஹிட்டானது. அதேபோல் OTT வியாபாரமும் பல கோடி லாபம் கண்டுள்ளது.

லஞ்சம் கேட்ட தணிக்கைக்குழு :

திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியில் படத்தை திரையிட தணிக்கை சான்றிதழ் வழங்கவதற்கு விஷால் அணுகி இருந்தார். அதற்காக சான்றிதழ் வழங்க இந்தி சென்சார் போர்டு தன்னிடம் கேட்டதாகவும், அதற்காக ரூ.6.5 லட்சம் கொடுத்ததாக (Vishal’s Latest Tweet About CBFC Case) கூறியிருந்தார் விஷால். மீடியேட்டராக இருந்த மேனகாவுக்கு சென்சார் வாங்க பணம் கொடுப்பதை தவிர வேறு வழியில்லை என்று அந்த வீடியோவில் கூறியிருந்தார். மேலும், இந்த விவகாரத்தில் மகாராஷ்டிர முதல்வரும், பிரதமர் மோடியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஷால் வேண்டுகோள் (Vishal’s Latest Tweet About CBFC Case) விடுத்திருந்தார்.  

விசாரணை நடந்து வரும் நிலையில் நடிகர் விஷால் மற்றும் அவரது மேலாளர் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் மும்பையில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தனர். இது குறித்து விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில், விசாரணை நடத்தப்பட்டது ஒரு புது விதமான மகிழ்ச்சி அளிக்கிறது. நானும் அரசு அலுவலத்திற்கு செல்வேன் என்று நான் என் வாழ்வில் நினைத்ததில்லை. ரீல் வாழ்க்கை மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் ஊழலுக்கு எதிராக குரல் எழுப்புவேன் (Vishal’s Latest Tweet About CBFC Case) என பதிவிட்டுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply