Vitamin C Foods In Tamil : வைட்டமின் சி நிறைந்த சத்தான உணவுகள்

நம்முடைய அன்றாட உணவில் வைட்டமின் சி நிறைந்த உணவை (Vitamin C Foods In Tamil) எடுத்துக்கொண்டால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். பொதுவாக நமக்கு நோய்கள் அண்டாமல் இருக்கவும் உடலை எனெர்ஜியாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. ஒரு நாளைக்கு 100 மிகி வைட்டமின் சி-யை எடுத்துக்கொள்ளும் நபருக்கு கேன்சர் அபாயம் குறைவதாக ஆய்வுகளின் முடிவுகள் கூறுகின்றன. நாம் அனைவரும் தினமும் சாப்பிடக்கூடிய உணவுகளில் இருந்தே வைட்டமின் சி காணப்படுகிறது. ஆனால், நாம் வைட்டமின் சி நிறைந்திருப்பதை அறியாமலேயே அந்த உணவுகளை தவிர்த்து வருகிறோம்.

Vitamin C Foods In Tamil :

கொய்யாப்பழம்

அனைவரது வீடுகளிலும் சாதாரணமாக கிடைக்கக்கூடிய கொய்யாப்பழத்தில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவற்றில் அதிகமாக ஆன்டிஆக்ஸிடன்ட் இசோப்பேன் இருக்கிறது. கொய்யாப்பழத்தில் 145 கிராம் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதனால் இவற்றை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் உடலில் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை குறைகிறது. 

பச்சை மிளகாய்

ஒரு பச்சை மிளகாயில் 109 மி.கி வைட்டமின் சி  நிறைந்துள்ளது. அதேபோலவே ஒரு சிவப்பு மிளகாயில் 65 மி.கி வைட்டமின் சி  காணப்படுகிறது. நாம் அனைவரும் அனுதினமும் சாப்பிடக்கூடிய உணவில் எதாவது ஒருவகையில் இந்த பச்சை மிளகாய் கலந்து விடுகிறது. ஆனால் அவற்றின் காரத் தன்மையால் அதை தவிர்த்து விடுகிறோம். ஆனால் பச்சை மிளகாயை உணவுடன் சாப்பிட்டால் மூட்டு மற்றும் தசை வலியை போக்கும்.

ஆரஞ்சு பழம்

பொதுவாக வைட்டமின் சி நிறைந்த உணவு என்றால் நாம் அனைவருக்குமே தெரிந்தது ஆரஞ்சு பழம் தான். இவ்வாறு பலருக்கும் தெரிந்த இந்த பழத்தை தினமும் உண்டு வைட்டமின் சி ஆற்றலை பெற்றுக்கொள்ளுங்கள். அந்த வகையில் ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டால் 83 மி.கி வைட்டமின் சி கிடைக்கும்.

மஞ்சள் குடைமிளகாய்

வைட்டமின் சி நிறைந்த உணவு பொருட்களை உட்கொள்வதன் மூலம் கண்களுக்கு நன்மை கிடைக்கிறது. வைட்டமின் சி சத்து குறையும் போது கண்களில் பார்வை மங்குவது, புரை வளர்த்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதனால் வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். ஒரு மஞ்சள் குடைமிளகாயில் 342 மி.கி வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.

ஸ்ட்ராபெரி

ஸ்ட்ராபெரி பழத்தை பொதுவாக பணக்கார பழம் என்று கூறுவார்கள். ஆனால் தற்போது இந்த பழம் விலை குறைவாகவும், மலிவாகவும் கிடைக்கிறது. இவற்றில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும் பற்களை வெண்மையாக்கவும் உதவுகிறது. நாம் 166 கிராம் ஸ்ட்ராபெரி பழம் சாப்பிட்டால் 97 மி.கி வைட்டமின் சி கிடைக்கிறது.

பப்பாளி

ஒரு கிராம் பப்பாளி சாப்பிடுவதன் மூலம் 88 மி.கி வைட்டமின் சி கிடைக்கிறது. மறதி நோய் இருப்பவர்கள் பப்பாளி பழத்தை சாப்பிடலாம், இது நியாபக சக்தியை அதிகரிக்கிறது. 

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியை தொடர்ந்து உண்ணுவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல பலனை அளிக்கிறது. மேலும் இவை புற்றுநோய்க்கு எதிராக போராடும் பண்புகளை கொண்டுள்ளது. ஒரு கப் வேகவைத்த ப்ரோக்கோலியில் 51 மி.கி வைட்டமின் சி நிறைந்துள்ளது.

எலுமிச்சை பழம்

ஒரு எலுமிச்சை பழத்தில் 45 மி.கி வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. மேலும் எலுமிச்சை பழம் பல்வேறு விதமான சக்திகளை கொண்டுள்ளது. இவற்றின் சாறில் உள்ள கூறுகள் ஆன்டிஆக்ஸிடண்டுகளாக வேலை செய்கின்றன.    

கிவி பழம்

கிவி பழமானது ரத்தப்போக்கு மற்றும் ஸ்ட்ரோக் ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது. மேலும் உடலில் நோயெதிர்ப்பை பலப்படுத்தவும் செய்கிறது. வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. இவ்வளவு நன்மைகளை கொண்டுள்ள ஒரு கிவி பழத்தில் 56 மி.கி வைட்டமின் சி அடங்கியுள்ளது.

கொத்தமல்லி

கொத்தமல்லியில் ஆன்டிஆக்ஸிடண்டுகள் மற்றும் வைட்டமின் கே நிறைந்துள்ளது. 8 கிராம் கொத்தமல்லியில் 10 மி.கி வைட்டமின் சி நிறைந்துள்ளது. இந்நிலையில் மேலே கொடுக்கப்பட்டுள்ள (Vitamin C Foods In Tamil) வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொண்டு பயன்பெறுங்கள்.      

Latest Slideshows

Leave a Reply