Vivek Ramaswamy Exit : அமெரிக்க அதிபர் தேர்தல் ரேஸில் இருந்து விலகுவதாக விவேக் ராமசாமி அறிவித்துள்ளார்

Vivek Ramaswamy Exit :

அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி (Vivek Ramaswamy Exit) அறிவித்துள்ளார். இதற்கு என்ன காரணம் அங்கு என்ன நடந்தது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்தல் எப்போதும் சுவாரசியமாக இருக்கும். அங்குப் பிரதான கட்சிகளான ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி என இரு கட்சிகள் மட்டுமே இருக்கிறது. இதனால் இரு கட்சிகள் சார்பாக போட்டியிடப் பலரும் விருப்பம் தெரிவிப்பார்கள். அவர்களுக்கு இடையே உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு யாருக்குக் கட்சியில் அதிகமாக செல்வாக்கு இருக்கிறதோ அவர்கள் போட்டியிடுவார்கள். மேலும் அமெரிக்காவில் ஒருவரால் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும்.

இப்போது ஆளும் ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபராக இருக்கும் ஜோ பைடன் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. அதேசமயம் இப்போது எதிர்க்கட்சியாக உள்ள குடியரசு கட்சி சார்பில் பலரும் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தனர். அவர்களில் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் இருந்த நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமிக்கு அதிகமாக ஆதரவு இருந்தது. இருவருக்கும் இடையே நல்ல போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ரேஸில் இருந்து விலகுவதாக விவேக் ராமசாமி (Vivek Ramaswamy Exit) தற்போது அறிவித்துள்ளார்.

ஐயோவா மாகாணத்தில் அதிபர் வேட்பாளரைத் தேர்வு செய்ய குடியரசு கட்சி சார்பில் உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. முக்கியமான உட்கட்சி தேர்தல் என்பதால் பலரது கவனமும் இதன் மீது திரும்பி இருந்தது. இந்த உட்கட்சி தேர்தலில் டிரம்பிற்கு தான் ஆதரவு அதிகமாக இருந்தது. விவேக் ராமசாமி இந்த உட்கட்சி தேர்தலில் தோல்வி அடைந்தார். இந்தச் சூழலில் தான் அதிபர் ரேஸில் இருந்து தான் விலகுவதாக விவேக் ராமசாமி (Vivek Ramaswamy Exit) அறிவித்துள்ளார். மேலும் அவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவு தருவதாகவும் அறிவித்துள்ளார்.

விவேக் ராமசாமி கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார். அந்த அறிவிப்பை வெளியிடும் போது விவேக் ராமசாமியை பற்றி குடியரசு கட்சியிலேயே பலருக்கும் தெரியாது. இருப்பினும் அவரது பிரச்சாரமும் அவருடைய அணுகுமுறையும் அவருக்கான செல்வாக்கை அதிகரித்தது. குறிப்பாக அவர் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான நிலைப்பாட்டை கையில் எடுத்தார். மேலும் அமெரிக்காவுக்கே முன்னுரிமை தருவேன் என்றார். விவேக் ராமசாமியுடைய பிரச்சாரம் அப்படியே டிரம்பின் ஸ்டைல் தான் இருந்தது. கருத்துகள் மட்டுமின்றி தனது பிரச்சார அணுகுமுறையையும் டிரம்ப் போலவே கையாண்டார். முந்தைய தேர்தல்களில் ட்ரம்பை அபார வெற்றிபெறச் செய்த பழமைவாதிகள் தனக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று விவேக் ராமசாமி நம்பினார். விவேக் ராமசாமிக்கு ஓரளவுக்கு பழமைவாதிகள் ஆதரவு கிடைத்த போதிலும் டிரம்ப் களத்தில் இருந்ததால் பெரியளவில் செல்வாக்கு அதிகரிக்கவில்லை.

கேரளா பூர்வீகம் :

விவேக் ராமசாமி அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் வசித்து வருகிறார். அவரது பெற்றோர் கேரளாவில் இருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவர்கள். இந்திய அமெரிக்கர்கள் மத்தியில் அவருக்கான ஆதரவு அதிகமாகவே இருந்தது. அவர் டிரம்ப் ஸ்டைலை பின்பற்றும் நிலையில் டிரம்ப் சமீபத்தில் அவரை மிக மோசமாகச் சாடியிருந்தார். விவேக் ராமசாமியை மோசடி பேர்வழி எனக் குறிப்பிட்ட டிரம்ப் நீங்கள் இந்திய அமெரிக்கர் ஒருவருக்கு வாக்களித்தால் அது அமெரிக்காவுக்கு வாக்களிப்பது இல்லை என்பது போலக் கூறியிருந்தார். டிரம்பின் இந்த பேச்சு குடியரசு கட்சியில் பெரிய அளவில் பேச்சுப் பொருளானது. இதன் விளைவாக உட்கட்சி தேர்தலில் விவேக் ராமசாமி தோல்வி அடைந்தார்.

Latest Slideshows

Leave a Reply