விவோ நிறுவனம் புதிய Vivo T3 Pro 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது
விவோ நிறுவனம் விவோ டி3 ப்ரோ 5ஜி (Vivo T3 Pro 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த விவோ போன் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங், சோனி கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது.
விவோ டி3 ப்ரோ 5ஜி சிறப்பம்சங்கள் (Vivo T3 Pro 5G Specifications) :
- Vivo T3 Pro 5G Display : இந்த விவோ டி3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED Display) டிஸ்பிளே வசதியுடன் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்த போனின் டிஸ்பிளேவானது 1,080 x 2,392 பிக்சல்ஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அறிமுகமாகியுள்ளது. ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த புதிய Vivo T3 Pro 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் 3 வருடங்களுக்குப் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும் என விவோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
- Vivo T3 Pro 5G Camera : இந்த விவோ டி3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) ஆதரவு கொண்ட 50MB சோனி ஐஎம்எக்ஸ் 882 பிரைமரி கேமரா + 8MB அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அம்சத்துடன் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் 16MB செல்பி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
- Vivo T3 Pro 5G Storage : 8GB RAM + 128GB மெமரி மற்றும் 8GB RAM + 256GB மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த Vivo T3 Pro 5G ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் விவோ நிறுவனம் இந்த போனின் மென்பொருள் மற்றும் வடிவமைப்பு வசதிக்கு முக்கிய கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
- Vivo T3 Pro 5G Colors : எம்ரால்டு கிரீன் (Emerald Green) மற்றும் சாண்ட்ஸ்டோன் ஆரஞ்ச் (Sandstone Orange) ஆகிய இரண்டு நிறங்களில் இந்த விவோ டி3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது.
- Vivo T3 Pro 5G Battery : இந்த விவோ டி3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5500mAh பேட்டரி வசதியுடன் விற்பனைக்கு வந்துள்ளது.
- Vivo T3 Pro 5G Rate : 8GB RAM + 128GB மெமரி கொண்ட விவோ டி3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.24,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் 8GB RAM + 256GB மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.26,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.3000 வரை தள்ளுபடி உள்ளது.
Latest Slideshows
-
11733 Crore Collection In Bond Registrations : பத்திரப்பதிவுகள் நடப்பு நிதியாண்டில் ரூ.11,733 கோடி ரூபாய் வசூல்
-
Vaa Vaathiyaar Teaser : வா வாத்தியார் படத்தின் டீசர் வெளியீடு
-
Kanguva Review : கங்குவா படத்தின் திரை விமர்சனம்
-
IND Vs SA 3rd T20 : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி
-
Children's Day 2024 : குழந்தைகள் தின வரலாறும் முக்கியத்துவமும்
-
Miss You Teaser : சித்தார்த் நடித்துள்ள 'மிஸ் யூ' படத்தின் டீசர் வெளியீடு
-
Shiva Rajkumar In Thalapathy 69 : தளபதி 69 படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்
-
ITBP Recruitment 2024 : இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு பிரிவில் 526 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
ISRO Provide Navigation Signal : மொபைல் போனில் நேவிகேஷன் சிக்னல் வழங்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது
-
அரியலூரில் ரூ1000 கோடி முதலீட்டில் தைவானின் Teen Shoes நிறுவனம்