விவோ நிறுவனம் இன்று புதிய Vivo X200 Pro ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது

விவோ நிறுவனம் Vivo X200 Pro எனும் புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. ஆன்லைனில் கசிந்துள்ள இந்த போனின் சிறப்பம்சங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.  

Vivo X200 Pro Specifications :

  1. Vivo X200 Pro Display : இந்த விவோ எக்ஸ்200 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் 1K Amoled டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் இந்த போனில் 1440 x 3200 கூகுள் பிக்சல்ஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் என சிறந்த பாதுகாப்பு வசதியுடன் விற்பனைக்கு வருகிறது. மேலும் இந்த விவோ ப்ரோ போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ் உள்ளிட்ட பல வசதிகளுடன் அறிமுகம் செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பெரிய டிஸ்பிளே வடிவமைப்புடன் விற்பனைக்கு வருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என விவோ நிறுவனம் தெரிவித்துள்ளது.  

  2. Vivo X200 Pro Camera : இந்த விவோ எக்ஸ்200 ப்ரோ ஸ்மார்ட்போனில் 50 MB சோனி கேமரா + 50 MB அல்ட்ரா வைடு ஆங்கிள் சென்சார் கேமரா + 200 MB டெலிபோட்டோ லென்ஸ் கேமரா என்ற  ட்ரிபிள் ரியர் கேமரா அம்சத்துடன் இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே தனியே 50MB கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

  3. Vivo X200 Pro Storage : இந்த விவோ எக்ஸ்200 ப்ரோ ஸ்மார்ட்போன் 16GB RAM + 512GB ஸ்டோரேஜ் வசதியுடன் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் இந்த போனில் V3+ என்ற இமேஜிங் தொழில்நுட்ப சிப் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர தனித்துவமான வீடியோ, ஆடியோ அம்சங்கள் விவோ ப்ரோ போனில் வழங்கப்பட்டுள்ளதாக விவோ நிறுவனம் கூறியுள்ளது. 

  4. Vivo X200 Pro Battery : இந்த விவோ எக்ஸ்200 ப்ரோ ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி வசதியுடன் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 30W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது.      

  5. Vivo X200 Pro Rate : ஆன்லைனில் கசிந்துள்ள தகவலின்படி இந்த விவோ எக்ஸ்200 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.48000 என்ற உயர்வான  விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த Vivo X200 Pro ஸ்மார்ட்போனுடன் விவோ எக்ஸ்200 அல்ட்ரா, விவோ எக்ஸ்200 ப்ரோ மினி ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply