Vladimir Putin Re-Elected 5th Time As President : விளாடிமிர் புதின் தொடர்ந்து 5-வது முறையாக அதிபராக தேர்வு

Vladimir Putin Re-Elected 5th Time As President :

ரஷ்யாவில் அதிபர் தேர்தல் கடந்த 15/03/2024-ம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற்றது. இந்த அதிபர்  தேர்தலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை எதிர்த்து 3 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 71 வயதான விளாடிமிர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார். அதிபர் தேர்தலில் 88% வாக்குகளைப் பெற்ற விளாடிமிர் புதின் மீண்டும் அதிபர் பதவியில் தொடர்வது (Vladimir Putin Re-Elected 5th Time As President) உறுதியாகியுள்ளது. ரஷ்யாவில் சோவியத் ஒன்றியம் வீழ்ந்த பிறகு நடந்த தேர்தல்களில் ஒருவருக்குக் கிடைக்கும் அதிகபட்ச வாக்குகள் இதுவாகும்.

விளாடிமிர் புதின் தொடர்ந்து 5-வது முறையாக (Vladimir Putin Re-Elected 5th Time As President) அதிபராகத் தொடர்வார் எனக் கூறப்படுகிறது. விளாடிமிர் புதின் கடந்த 1999 முதல் ரஷ்யாவில் அசைக்கவே முடியாத தலைவராக இருக்கிறார். கம்யூனிஸ்ட் வேட்பாளர் நிகோலாய் கரிடோனோவ் இரண்டாவது இடத்தையும், விளாடிஸ்லாவ் டாவன்கோவ் மூன்றாவது இடத்தையும் மற்றும் லியோனிட் ஸ்லட்ஸ்கி நான்காவது இடத்தையும் பிடித்தனர். இந்தியாவைப் போல இல்லாமல் ரஷ்யாவில் அதிபர் ஆட்சி முறை தான் இருக்கிறது. ரஷ்யாவில் ஆறு ஆண்டுகளுக்கும் ஒரு முறை தேர்தல் நடக்கும்.

முதற்கட்ட தேர்தல் முடிவுகளில் ரஷ்யாவில் மிகவும் சக்திவாய்ந்த நபராக விளாடிமிர் புதின் உருவெடுத்துள்ளார் என்று தெரிய வருகிறது. கடந்த 200 ஆண்டுகளில் ரஷ்யா மற்றும் சோவியத் ஒன்றியத்தில் அதிக காலம் தலைவராக இருந்தவர்கள் பட்டியலில் ஜோசப் ஸ்டாலினை விளாடிமிர் புதின் ஓவர்கேட் செய்துள்ளார். விளாடிமிர் புதினை வலிமையாக எதிர்க்கும் அளவுக்கு எந்தவொரு வேட்பாளரும் இந்த முறை களத்தில் இல்லை என்பது ஓர் உண்மை ஆகும். தொடர்ந்து ஒரு நபர் 2 முறை ரஷ்யாவில் அதிபராக இருக்க முடியாது என்ற விதி இருந்தது. 1999-ல் பதவிக்கு வந்த புதின் தனது நண்பர் டிமிட்ரி மெட்வெடேவ் என்பவரிடம் 2008-ல் அதிபர் பதவியை ஒப்படைத்துவிட்டு ஒரு முறை மட்டும் பிரதமராக இருந்தார். விளாடிமிர் புதின் மீண்டும் 2012ல் அதிபராகி அந்த சட்டத்தை மாற்றினார். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தொடர்ந்து அதிபராக இருக்கலாம் என்று விதியை மாற்றினார். மேலும், புதின் பிரதமராக இருந்த போது அதிபரின் 4 ஆண்டுகளாக இருந்த பதவிக் காலத்தை 7 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது. விளாடிமிர் புதின்  திட்டமிட்டே இதைச் செய்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply