Walmart GCC Center Coming In Bangalore : Walmart பெங்களூரில் தனது GCC மையத்தை அமைக்க இருக்கிறது

Walmart GCC Center Coming In Bangalore :

பல்வேறு துறையைச் சேர்ந்த வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்களுடைய Global Capability Centre-களை அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் பட்டியலில் தற்போது Walmart நிறுவனமும் சேர்ந்துள்ளது. Walmart நிறுவனம் அமெரிக்காவில் அமைந்துள்ள ஒரு நிறுவனம் ஆகும். 1962 இல் இந்த Walmart நிறுவனத்தின் முதல் விற்பனை நிலையத்தை Sam Vollan ஆரம்பித்தார். இந்த Walmart நிறுவனம் அமெரிக்காவில் மட்டுமல்லாது Mexico, Canada, Argentina, Brazil, South Korea, China, Germany மற்றும் England ஆகிய நாடுகளிலும் பரந்துள்ளது. உலக அளவில் 2006 இல் இந்த Walmart நிறுவனம் விற்பனை அடிப்படையில் Exon Mobil-ற்கு அடுத்ததாக உள்ள இரண்டாவது பெரிய நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஜனவரி 31, 2024 நிலவரப்படி, சுமார் 2.1 மில்லியன் கூட்டாளிகளை பெற்றுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான Prestige உடன் பெங்களூருவில் தன்னுடைய ஜிசிசி (GCC) மையத்தை அமைக்க Walmart நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. Walmart நிறுவனம் மற்றும் Prestige நிறுவனங்களுக்கு இடையே இந்த ஒப்பந்தம் ஆனது Sept 2024 மாதத்தின் முதல் வாரத்திலேயே கையெழுத்தானது. இந்த ஒப்பந்தந்தின்படி மூன்று ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் ஆனது நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் Walmart நிறுவனம் இந்தியாவில் தங்களுடைய சேவைகளை விரிவுபடுத்துவதற்கு முடிவு (Walmart GCC Center Coming In Bangalore) செய்திருப்பது தெரியவந்துள்ளது.

Prestige நிறுவனம் வால்மார்ட் நிறுவனத்திற்கு தேவையான அலுவலக இடத்தை பெங்களூருவில் ஏற்படுத்தி (Walmart GCC Center Coming In Bangalore) தர இருக்கிறது. இந்த Global Capability Centre அலுவலகம் ஆனது ஒரு மில்லியன் சதுரடி அளவில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக Walmart நிறுவனம் Prestige நிறுவனத்திற்கு ஒரு சதுரடிக்கு 95 ரூபாய் என்ற அளவில் வாடகையை செலுத்தும். இந்த Global Capability Centre அலுவலக இடத்திற்காக ஆண்டுக்கு 108 கோடி ரூபாயை Walmart நிறுவனம் கட்டணமாக செலுத்த உள்ளது. Prestige நிறுவனத்திற்கு நடப்பு ஆண்டினை பொருத்தவரை லாபகரமான ஆண்டாக அமைந்திருக்கிறது என அதன் தலைவரான ஜகி மர்வாஹா தெரிவித்துள்ளார். நடப்பாண்டு 2024 இறுதிக்குள் 50 லட்சம் சதுரடி அளவிலான புதிய ஒப்பந்தங்களை கையெழுத்திடுவதே Prestige நிறுவனத்தின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply