Walmart Import From India : Walmart ஆனது சீனாவின் இறக்குமதியை குறைத்து இந்தியாவுக்கு மாறுகிறது

Walmart ஆனது சீனாவிலிருந்து பெறும்  இறக்குமதியை குறைக்கிறது (Walmart Import From India) மற்றும் சீனாவை நம்பியிருப்பதை குறைக்கிறது. இந்தியாவிலிருந்து அதிகமான பொருட்களை இறக்குமதி செய்கிறது. இந்த 2023-ஆம் ஆண்டு பங்குச் சந்தையில் இந்தியா ஆனது வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த நிதியாண்டில் இந்திய நாட்டின் பொருளாதாரம் ஆனது 6.5% விரிவடையும் என்று இந்தியாவின் மத்திய வங்கி கணித்துள்ளது. இந்த 2023-ஆம் ஆண்டு  சீனா ஆனது 5% வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த விலை மற்றும் பெரிய அளவிலான உற்பத்தியில் சீனாவை விஞ்சும் வகையில் இந்தியா  (Walmart Import From India) சிறந்த நாடாகக் கருதப்படுகிறது.

Walmart Import From India - இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் பணியாளர்கள் :

இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும்  சிறந்த பணியாளர்கள் வால்மார்ட்டுக்கு ஒரு ஈர்ப்பாக உள்ளது. மேலும் பெரிய அளவிலான உற்பத்திக்கான கவர்ச்சிகரமான இடமாக ஆக்குகின்றன என்று வால்மார்ட்ன் ஆல்பிரைட் கூறினார். வால்மார்ட் ஆனது அதிக உற்பத்தி திறனை ஆதாரமாகக் கொண்டு செயல்படும் ஒரு வளர்ச்சி வணிகம் என்பதால் அந்த உற்பத்தித் திறனை தரும் இந்தியாவை  ஊக்குவிக்கின்றது. இந்தியா தற்போது வால்மார்ட்ன் முக்கிய அங்கமாக (Walmart Import From India) உருவெடுத்துள்ளது. வால்மார்ட்டின் அதிக உற்பத்தி திறனை கட்டியெழுப்பும் முயற்சிகளின் முக்கிய அங்கமாக இந்தியா உருவெடுத்துள்ளது. தற்போது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும்  வால்மார்ட் ஆனது வரும் 2027 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் $10 பில்லியன் பொருட்களை இறக்குமதி செய்ய போவதாக உறுதியளித்துள்ளது.

பெங்களூரில் 2002 இல் வால்மார்ட் தனது ஆதார நடவடிக்கைகளைத் தொடங்கியது :

பெங்களூரில் 2002 இல் வால்மார்ட் தனது ஆதார நடவடிக்கைகளை இந்திய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்டில் 77% பங்குகளை வாங்கி தொடங்கியது. தற்போது 2018 ஆம் ஆண்டு முதல் Walmart இந்தியாவில் நல்ல வளர்ச்சியை துரிதப்படுத்தி வருகிறது. இப்போது Walmart நிறுவனம் அதன் வால்மார்ட் குளோபல் டெக் இந்தியா யூனிட், ஃப்ளிப்கார்ட் குரூப், ஃபோன்பே மற்றும் சோர்சிங் செயல்பாடுகளின் கீழ் உள்ள பல அலுவலகங்களில், நாட்டில் தற்காலிக பணியாளர்கள் உட்பட 100,000 க்கும் மேற்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது.

அமெரிக்க இறக்குமதி தரவுகளின்படி, கடந்த 2022 ஆம் ஆண்டு, இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறைமுகமான குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்திலிருந்து வால்மார்ட் கிடங்குகளுக்கு குறைந்தது எட்டு ஃப்ரீவில் ஏற்றுமதிகள் சென்றன. வால்மார்ட் பொம்மைகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் முதல் சைக்கிள்கள் மற்றும் மருந்துகள் வரையிலான பொருட்களை இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்கிறது (Walmart Import From India) என்று ஆல்பிரைட் கூறினார் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள், உலர் தானியங்கள் மற்றும் பாஸ்தா ஆகியவையும் இந்தியாவில் இருந்து பிரபலமான (Walmart Import From India) இறக்குமதியாகும்.

இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில், அதன் அமெரிக்க இறக்குமதியில் கால் பகுதியை இந்தியாவிலிருந்து பெற்றுள்ளது. 2027 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் $10 பில்லியன் பொருட்களை இறக்குமதி செய்யும் இலக்கை அடையும் பாதையில் உள்ளது. வால்மார்ட் ஆனது அதிக உற்பத்தி திறனை ஆதாரமாகக் கொண்டு செயல்படும் ஒரு வளர்ச்சி வணிகம் என்பதால் அந்த உற்பத்தித் திறனைக் கட்டியெழுப்ப வால்மார்ட்டின் முயற்சிகளின் முக்கிய அங்கமாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று ஆல்பிரைட் கூறினார். வால்மார்ட்டின் நடவடிக்கையானது, புவிசார் அரசியல் நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியில் அபாயங்களைக் குறைக்கவும், நிலையான விநியோகச் சங்கிலியை உறுதி செய்யவும் விரும்பும் போக்கை பிரதிபலிக்கிறது.

Latest Slideshows

Leave a Reply