Walnut Benefits In Tamil : வால்நட் பருப்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

Walnut Benefits In Tamil : மற்ற எல்லா வகை நட்ஸ்களையும் விட சற்று சுவையிலும் மற்றும் ஆரோக்கியத்தின் அடிப்படையிலும் சற்று வேறுபட்டது வால்நட் என்னும் அக்ரூட். இது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் முதலிடத்தை பிடித்துள்ளது என்று கூட சொல்லலாம். இந்த வால்நட் ஊறவைத்து காலையில் சாப்பிட்டால் இன்னும் பலன்கள் கிடைக்கும். இத்தொகுப்பில் இதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். வால்நட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

வால்நட் என்னும் அக்ரூட் பருப்பில் மிக அதிக அளவிலான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் கொழுப்பை எளிதில் கரைக்கும் தன்மை கொண்டது. மற்ற பருப்பு வகைகளை விட இது கசப்பாக இருப்பதால் இதன் சுவை பிடிக்காதவர்கள் தேனுடன் கலந்து சாப்பிடலாம். ஊறவைத்து சாப்பிட்டால் சிறிது கசப்பு நீங்கும்.

வால்நட்ஸின் பயன்கள் :

Walnut Benefits In Tamil - மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த :

வால்நட்ஸில் உள்ள புரதம் மற்றும் வைட்டமின்கள் அனைத்தும் இரத்தத்தில் கலந்து மூளையை நன்கு செயல்பட தூண்டுகிறது. எனவே இந்த வால்நட்ஸை வளரும் குழந்தைகளுக்கு தினமும் 5 வீதம் காலையில் எழுந்தவுடன் கொடுக்கலாம். இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம்  நினைவாற்றலை மேம்படுத்துகிறது.

Walnut Benefits In Tamil - மார்பகப் புற்றுநோயை தடுக்க :

பெண்கள் ஊறவைத்த வால்நட்ஸை தினமும் சாப்பிட்டு வந்தால் மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கலாம். அதோடு வால்நட்ஸ் கணைய புற்றுநோயின் அபாயத்தைத் தடுப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே புற்றுநோயின் பாதிப்பில் இருந்து விடுபட வேண்டுமானால், தினமும் வால்நட்ஸை தவறாமல் சாப்பிடலாம்.

Walnut Benefits In Tamil - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க :

அக்ரூட் பருப்பில் புரதம் மற்றும் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளன, இது உடலுக்கு கூடுதல் ஆற்றலை அளிக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் வால்நட்ஸைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இதனால் நம் உடலில் எந்த ஒரு நோய் தொற்றும் எளிதாக தாக்கிவிட முடியாது.

Walnut Benefits In Tamil - ஆழந்த தூக்கத்தை பெற :

சிலர் இரவில் தூக்கமின்மையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக ஷிப்ட் மாறி வேலை செய்பவர்கள் பலருக்கும் இந்த பிரச்சனை உள்ளது. இத்தகைய தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் தினமும் இரவில் சாப்பிட்ட பிறகும், பாலில் சேர்த்தாலோ அல்லது தனியாகவோ வால்நட் எடுத்துக் கொள்ளலாம். தூக்கமின்மை பிரச்சனையை சமாளித்து நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.

Walnut Benefits In Tamil - வயதான தோற்றத்தை தடுக்க :

வால்நட்ஸ் உடல் வறட்சியை போக்கும். இது நெற்றி மற்றும் தோலில் உள்ள சுருக்கங்களை குறைக்கும் சக்தி கொண்டது. சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். எனவே தினமும் அக்ரூட் பருப்பை சாப்பிட்டு வர, உடல் வறட்சியால் ஏற்படும் தோல் சுருக்கம் பிரச்சனை குணமாகும். சில துளிகள் பால் சேர்த்து சிறிது அக்ரூட் பருப்புகள் சேர்த்து சிறிது கரடுமுரடாக அரைத்து, ஸ்கின் ஸ்க்ரப்பாக கூட பயன்படுத்தலாம். சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்கும் சக்தி இதற்கு உண்டு.

Walnut Benefits In Tamil - அஜீரணக் கோளாறை தடுக்க :

உடலில் ஏற்படும் அனைத்து வகையான பிரச்சனைகளுக்கும் மலச்சிக்கல் ஒரு காரணமாக இருக்கும். அஜீரணக் கோளாறுதான் இதற்கு காரணமாக இருக்கும். இது போன்ற செரிமான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் தினமும் அக்ரூட் பருப்பை சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். வயிற்றில் உள்ள அமிலங்கள் சுரப்பதையும் சீராக்கும்.

Walnut Benefits In Tamil - பித்தப்பை கற்கள் நீங்க :

இந்த வால்நட்ஸ் பித்தப்பை கற்களை கரைக்கும் தன்மை கொண்டது. எனவே பித்தப்பையில் கற்கள் உள்ளவர்கள் ஊறவைத்த வால்நட்ஸை தினமும் உட்கொள்வதன் மூலம் பித்தப்பை படிப்படியாக கரைந்துவிடும். குறிப்பாக வலியின்றி கற்கள் வெளியேறும்.

Walnut Benefits In Tamil - எடை குறைக்க :

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உணவில் கார்போஹைட்ரேட்டின் அளவைக் குறைத்து, அதிக புரதத்தை உட்கொள்வது வழக்கம். அதற்காக அதிக நட்ஸ் சாப்பிடுவார்கள். அப்படி எடுத்துக் கொள்ளும் போது மற்ற நட்ஸ்களைக் காட்டிலும் நீங்கள் உங்கள் டயட்டில் அதிகமாக வால்நட்ஸை எடுத்துக்கொள்ளலாம். இதனால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதனால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும். இவ்வாறு பல நன்மைகளை கொண்ட வால்நட்ஸை உண்டு பயன் பெறுங்கள்.

Latest Slideshows

Leave a Reply