Warner Record Breaking Innings : ஒரே இன்னிங்ஸில் பல சாதனைகளை முறியடித்த வார்னர்

Warner Record Breaking Innings :

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 163 ரன்கள் எடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்துள்ளார். உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 367 ரன்கள் குவித்துள்ளது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் 124 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகள் அடங்கலாக 163 ஓட்டங்களையும், மிட்செல் மார்ஷ் 108 பந்துகளில் 121 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஒருநாள் அரங்கில் டேவிட் வார்னரின் 21வது சதம் இதுவாகும். அதேபோல், பாகிஸ்தானுக்கு எதிராக டேவிட் வார்னர் (Warner Record Breaking Innings) தனது 4வது சதத்தை அடித்துள்ளார். டேவிட் வார்னர் 2017ல் சிட்னியில் பாகிஸ்தானுக்கு எதிராக 130 ரன்களும், அதே ஆண்டில் அடிலெய்டில் 179 ரன்களும் எடுத்தார். இதேபோல், 2019 உலகக் கோப்பை டவுன்டவுனில், விளாசி 107 ரன்கள் விளாசி மற்றும் தற்போது 163 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் விராட் கோலிக்கு பிறகு ஒரே அணிக்கு எதிராக தொடர்ந்து 4 சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்துள்ளார். மேலும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் டேவிட் வார்னரின் 5வது சதம் (Warner Record Breaking Innings) இதுவாகும். இதன் மூலம் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை வார்னர் சமன் செய்துள்ளார்.

டேவிட் வார்னர் :

அதுமட்டுமின்றி ஒருநாள் கிரிக்கெட்டில் டேவிட் வார்னர் 7வது முறையாக 150 ரன்களை கடந்துள்ளார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை 150 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் 2வது இடம் (Warner Record Breaking Innings) பிடித்துள்ளார். இவருக்கு முன் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 8 முறை 150 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். மேலும் உலக கோப்பை தொடரில் டேவிட் வார்னர் மூன்றாவது முறையாக 150 ரன்களை கடந்துள்ளார். இந்த போட்டியில் பல சாதனைகளை படைத்த டேவிட் வார்னருக்கு சின்னசாமி மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி மரியாதை செய்தனர். மேலும் டேவிட் வார்னருக்கு இதுவே கடைசி உலக கோப்பை தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply