Warner Retirement : புத்தாண்டு அன்று வந்த அதிர்ச்சி | டேவிட் வார்னர் ஓய்வு

Warner Retirement :

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக (Warner Retirement) அறிவித்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை நடக்கிறது. ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஏற்கனவே சொந்த மண்ணில் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக (Warner Retirement) அறிவித்துள்ளார். கடைசி டெஸ்ட் போட்டியில் அவருக்கு குட்பை சொல்ல ஆஸ்திரேலிய ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக (Warner Retirement) ரசிகர்களுக்கு மேலும் ஒரு ஷாக் கொடுத்துள்ளார் டேவிட் வார்னர். இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றபோது, ​​அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் சிட்னி மைதானத்தில் செய்தியாளர்களை சந்தித்த டேவிட் வார்னர், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கவுள்ளார். உலகக் கோப்பை தொடரின் போது இது குறித்து தொடர்ந்து பேசி வருகிறேன். அதன்படி இந்தியாவில் கோப்பையை வென்றது மிகப்பெரிய சாதனை. அதன்பிறகு இன்று ஓய்வு அறிவிப்பை வெளியிட முடிவு செய்தேன்.

ஒருநாள் போட்டிகளில் ஓய்வை அறிவித்து உலகம் முழுவதும் டி20 மற்றும் டி10 லீக்குகளை விளையாடலாம். இதன் மூலம் எதிர்கால வீரர்களுக்கு ஒருநாள் போட்டிகளில் வாய்ப்புகளை ஆஸ்திரேலிய அணி வழங்க முடியும். இரண்டு வருடங்களில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரப்போகிறது என்பது எனக்குத் தெரியும். ஒருவேளை அடுத்த 2 ஆண்டுகளில் நான் நன்றாக கிரிக்கெட் விளையாடினால், ஆஸ்திரேலிய அணிக்கு தேவைப்பட்டால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட தயாராக உள்ளேன் என்றார். இதுவரை 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள டேவிட் வார்னர், 22 சதங்கள், 33 அரைசதங்கள் உட்பட 6,932 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் 6வது இடத்தில் உள்ளார். 2027 உலகக் கோப்பை வரை ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வார்னர் திடீரென ஓய்வை (Warner Retirement) அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply