Wayanad Landslide : நாட்டையே சோகமாக்கிய வயநாடு நிலச்சரிவு

வயநாடு நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த பகுதியில் ராணுவம் மற்றும் விமானப்படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு (Wayanad Landslide) வருகின்றனர். வயநாடு தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் அமைந்துள்ளது. வயநாடு மாநிலத்தின் மிக முக்கியமான சுற்றுலாத் தளமாகவும் மற்றும் நகரமாகவும் உள்ளது. வயநாட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஏற்பட்ட 3 தொடர் நிலச்சரிவுகள் நாடு முழுவதும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Wayanad Landslide :

வயநாட்டில் உள்ள மேட்டுப்பட்டி, முண்டகை, சூரல்மலை ஆகிய பகுதிகளில் திடீரென நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் குடியிருப்புகள் பலத்த சேதமடைந்தன. இடைவிடாது பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக இந்த நிலச்சரிவு (Wayanad Landslide) ஏற்பட்டு அப்பகுதி கோர பிடியில் சிக்கியது. இப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு வரை 146 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் காயமடைந்த 128 பேர் மீட்கப்பட்டு வயநாட்டைச் சுற்றியுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கிய 481 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடரும் மீட்புபணி :

வயநாடு நிலச்சரிவின் பேரழிவு மிகவும் கடுமையாக இருந்ததால், இராணுவமும் விமானப்படையும் உடனடியாக மாநில பேரிடர் குழுவுடன் மீட்பு பணியில் ஈடுபட்டன. தமிழக அரசும் தனது மாநில பேரிடர் மீட்புக் குழுவை அனுப்பி வைத்துள்ளது. நேற்று காலை முதல் பல இடங்களில் சிக்கியவர்களை கயிறு கட்டி மீட்டு வருகின்றனர். பலமுறை நிலச்சரிவு ஏற்பட்டதால் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகளை மேற்கொண்டு மக்களை மீட்டு வருகின்றனர். மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய கிராமங்கள் அனைத்தும் இடிந்து விழுந்து, நிலச்சரிவு காரணமாக பல உடல்கள் மண்ணில் புதைந்துள்ளன.

இது பார்வையாளர்களின் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலைகளும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு, மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தொடர்ந்து 2வது நாளாக மீட்பு பணி நடந்து வருகிறது. மேலும் பல சடலங்கள் ஆறுகளில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த மண்சரிவினால் அட்டமலை மற்றும் மற்றொரு கிராமமும் தொடர்பு இன்றி துண்டிக்கப்பட்டுள்ளது. வயநாட்டில் ஓடும் சாலியாற்றில் பல சடலங்கள் கரை ஒதுங்கியது, மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது, மேலும் மீட்புக் குழுவினர் இரவு முழுவதும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 31 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. இந்த கொடூர சம்பவத்தில் ஏராளமான குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் உயிரிழந்தனர். மீட்கப்பட்ட உடல்களை அடையாளம் காணும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க தற்காலிக மருத்துவமனையும் அமைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இன்றும் கனமழை தொடரும் என்பதால் 11 மாவட்டங்களில் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply