Weight Loss Drinks: காலையில் அருந்த வேண்டிய அற்புத பானங்கள்!

உடலின் எடை அதிகரிப்பதற்கான காரணங்கள் :

இன்றைய உலகில் பல பேர் ஆரோக்கியமான டயட்டை பின்பற்றாமல் இருப்பது அல்லது தினசரி வழக்கமான உடற்பயிற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது போன்றவை உடல் எடையை பாதிக்கும் இரண்டு முக்கிய காரணிகளாகும். எனினும் இவற்றை தவிர உடலில் எதிர்பாராத விதமாக எடை அதிகரிப்பை ஏற்படுத்தக் கூடிய வேறு பல காரணங்கள் உள்ளன, அவற்றை பார்ப்போம்.

தூக்கமின்மை :

நாம் தினசரி போதுமான அளவு தூங்காமல் இருப்பதும் கூட எதிர்பாராத எடை அதிகரிப்புக்கு பங்களிக்கிறது. மேலும் உறங்கும் முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் நம்முடைய உணவுப் பழக்கம் மற்றும் மனநிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தூக்கத்தில் பிரச்சனை உள்ள நபர்கள் தங்கள் ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான அளவை விட அதிக கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை சாப்பிடுகிறார்கள். இதன் விளைவாக அவர்களின் உடல் எடை அதிகரிக்கிறது.

மருந்துகள்:

நாம் உட்கொள்ளும் ஒரு சில மருந்துகள் உடல் எடையை அதிகரிக்க கூடியவையாக இருக்கின்றன. மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள், ஸ்டெராய்டுகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் போன்ற சில மருந்துகளின் முக்கியமான பக்கவிளைவு எடை அதிகரிப்பு ஆகும். எனவே நீங்கள் மருந்துகளை எடுத்து கொண்டாலும் தகுந்த மருத்துவ நிபுணரிடம் ஆலோசித்து பின் எடுத்து கொள்ள துவங்குங்கள்.

மன அழுத்தம்:

இன்றைய நவீன இயந்திர வாழ்க்கைக்கு நடுவே மன அழுத்தம் என்பது பொதுவான ஒன்றாக மாறி விட்டது. கடுமையான நடைமுறைகள், வேலை அழுத்தம், காலக்கெடுக்கள், உள்ளிட்டவையின் காரணமாக ஏற்படும் கவலை, கோபம், சோகம் போன்ற பல காரணிகள் மன அழுத்தத்திற்கு முக்கிய பங்களிக்கின்றன. மன அழுத்தம் ஹார்மோன் லெவலில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்துகிறது. ஹார்மோன் சமநிலையின்மை எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.

Weight Loss Drinks - காலையில் அருந்த வேண்டிய பானங்கள் :

காலையில் காபி & தேநீர் குடிப்பதை தவிருங்கள் :

தினமும் காலையில் நாம் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் முதல் விஷயமாக டீ அல்லது காபி குடிப்பதை பலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இருப்பினும், அதை வெறும் வயிற்றில் சாப்பிடுவது ஆரோக்கியமானதல்ல.

காரணம் காலையில் முதலில் தேநீர் அல்லது காபி குடிப்பது வயிற்றில் அமிலம் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யுமாம். இதனால் செரிமானக் கோளாறுகள் ஏற்படக்கூடும். மேலும் செரிமானக் கோளாறுகள் போன்ற பிரச்சனைகளால் உடலின் எடை அதிகரிக்கிறது. டீ மற்றும் காபிக்கு பதிலாக சில ஆரோக்கியமான பானங்களை பருகுவதன் மூலம் உடல் எடை இழப்பு மற்றும் ஆரோக்கியத்தை காக்கலாம்.

Weight Loss Drinks - மஞ்சள்-மிளகு தண்ணீர் :

வெதுவெதுப்பான நீரில் தலா 2-3 சிட்டிகை அளவு மஞ்சள் மற்றும் மிளகுத்தூள் உங்கள் நாளைத் தொடங்க ஒரு ஆரோக்கியமான காலை பானத்தை உருவாக்கலாம். இந்த சக்திவாய்ந்த பானம் உங்களின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை அகற்ற மஞ்சள்-மிளகு கலந்த தண்ணீர் உதவுகிறது.

Weight Loss Drinks - ஓமம் மற்றும் சீரகம் கலந்த தண்ணீர் :

2 கப் தண்ணீரை எடுத்து அதில் ஒரு சிட்டிகை அளவு சீரகம் மற்றும் ஓமத்தை சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீரின் அளவு பாதியாகக் குறைந்தவுடன் வடிகட்டி, மெதுவாகப் பருகவும். இந்த ஓமம் மற்றும் சீரகம் கலந்த தண்ணீர் எடை இழப்புக்கு ஏற்ற பானமாகும். மேலும் செரிமானத்தை மேம்படுத்தவும் மற்றும் உடலின் வீக்கத்தை சமாளிக்கவும் உதவும், குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் சோம்பலை போக்கும்.

Weight Loss Drinks - எலுமிச்சை தண்ணீர் :

வெதுவெதுப்பான நீரில் ஒரு எலுமிச்ச பழத்தை பிழிந்து அதனுடன் தேன் மற்றும் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டையையும் சேர்த்து காலையில் குடித்தால் மிகவும் உடலுக்கு புத்துணர்ச்சியூட்டுவதோடு உங்கள் உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றவும் உதவும். இது உங்கள் சருமத்திற்கும் எற்ற ஆரோக்கியமான பானமாகும்.

Weight Loss Drinks - சுடு தண்ணீர் :

நாம் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கிறோம். அதற்கு பதிலாக வெதுவெதுப்பான சுடு தண்ணீரைக் குடிக்கவும். இது உங்கள் உடலில் பெரிய அளவு வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும் மற்றும் உடலின் எடையை கட்டுக்குள் வைத்திருக்கும். இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் உதவும்.

Latest Slideshows

Leave a Reply