7 Day Weight Loss Tips in Tamil: உடல் எடை குறைய உணவு அட்டவணை மற்றும் வழிகள்
மின்னல் வேகத்தில் உடல் எடையை குறைக்க பயனுள்ள வழிகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். நமது உடல் எடையை சீராக வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
Weight Loss Tips in Tamil: ஒரு மனிதனின் உயரத்திற்கு சராசரி எடை இருக்க வேண்டும். இந்த தரத்தை தாண்டி அதிக எடையுடன் இருப்பது பல்வேறு அபாயங்களை ஏற்படுத்தும். இது பல்வேறு மருத்துவ ஆய்வுகளின் முடிவு. அதிகப்படியான உடல் எடை பல்வேறு நோய்களை வரவழைக்கிறது. எடை அதிகரிப்பால் உயர் இரத்த அழுத்தம், குழந்தையின்மை, சர்க்கரை நோய் போன்ற நோய்கள் ஏற்படும்.
அதனால் பலர் உடல் எடையை பல்வேறு வழிகளில் குறைக்க விரும்புகிறார்கள். இதற்கு இயற்கை மற்றும் செயற்கை வழிகள் உள்ளன. உடல் எடையை குறைக்க இயற்கை வழிகள் சிறந்தவை. அந்த வகையில் இந்த பதிவில் உடல் எடையை குறைக்கும் வழிகள் என்னவென்று பார்ப்போம்.
உடல் எடை குறைய உணவு அட்டவணை (Weight Loss Tips in Tamil)
பெர்ரி பழங்கள்
பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் அதிகம். இவை உடல் எடையை குறைக்கும் ஆற்றல் கொண்டது. எனவே உடல் எடையை குறைக்கும் திட்டத்தில் இருப்பவர்கள் இந்த பழங்களை சாப்பிட வேண்டும்.
எலுமிச்சை
Weight Loss Tips in Tamil: எலுமிச்சை சாறு உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. சிறிது வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். இப்படி தொடர்ந்து செய்வதால் உடலில் உள்ள கொழுப்புகள் அனைத்தும் கரைய ஆரம்பிக்கும். மேலும், உடலில் சேரும் நச்சுக்கள் வெளியேற்றப்படும்.
கறிவேப்பிலை
Weight Loss Tips in Tamil: கறிவேப்பிலை எடை இழப்புக்கு அற்புதமான வகையில் உதவுகிறது. இந்தக் கருவேப்பிலையின் அருமை தெரியாமல் பலர் அதை ஒதுக்கி விடுகிறார்கள். இந்த கறிவேப்பிலை உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. கறிவேப்பிலையை பொடி செய்து உணவில் கலந்து சாப்பிடலாம். அல்லது இலைகளை முழுவதுமாக மென்று சாப்பிடுங்கள். அதேபோல் பச்சை கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டு வந்தால் விரைவில் பலன் தெரியும்.
தண்ணீர்
Weight Loss Tips in Tamil: நீங்கள் உடல் எடையை எந்த அளவிற்கு குறைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதே அளவிற்கு தண்ணீரை குடிக்க வேண்டும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு மற்றும் நச்சுகளை அகற்ற அற்புதமான வரிகள் உதவுகின்றன. வெறும் தண்ணீர் தானே என்று அலட்சியமாக இருக்காதீர்கள்.
பசலைக் கீரை
Weight Loss Tips in Tamil: பொதுவாக, உடல் எடையைக் குறைப்பதில் கவனம் செலுத்துபவர்கள் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அந்த வகையில் அனைத்து காய்கறிகளும் சாப்பிடுவது நல்லது. இருந்தாலும் பசலைக் கீரையைக் குறிப்பிட்டு சொல்லலாம். பசலைக் கீரையில் கொழுப்பு சக்தி கிடையாது. பசலைக்கீரை பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இவற்றில் கலோரிகளின் அளவு குறைவாக இருக்கும். கூடுதலாக, இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பசலைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
கிரீன் டீ குடித்தல்
கிரீன் டீ தயாரித்து குடிக்கலாம். இந்த கிரீன் டீ அதிகளவு உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, க்ரீன் டீ குடிப்பதால் பல்வேறு கூடுதல் ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும்.
சூப் குடித்தல்
காய்கறி மற்றும் கீரை சூப்களை சமைப்பது உட்கொள்வது சிறந்தது. நாம் இவ்வாறான சூப் குடிக்கும் போது அவற்றில் தேவையான அளவிற்கு மிளகை சேர்த்து கொள்ள வேண்டும். மிளகில் கொழுப்பைக் கரைக்கும் ஆற்றல் அதிகமாக உள்ளது.
7 Day Weight Loss Tips in Tamil: வாழ்வியல் முறையில் கடைபிடிக்க வேண்டிய மாற்றங்கள்
உடற்பயிற்சி
7 Day Weight Loss Tips in Tamil: உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உடல் உழைப்பு மிகவும் அவசியம். இன்று பலரது வேலைகளில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதுதான். இதனால் அவர்களின் உடல் எடை அதிகரித்து வருகிறது. உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் மற்றும் நச்சுகள் வியர்வை மூலம் வெளியேறும். அதுமட்டுமின்றி, நடைபயிற்சி செய்வது மிகவும் அவசியம். இதனை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல முறையில் உடல் எடையை குறைக்கலாம்.
உண்ணும் முறை
நாம் சாப்பிடும் போது டிவி, மொபைல் போன் ஆகிவற்றை பார்க்க கூடாது. இப்படி சாப்பிடும் போது, நம்முடைய கவனம் இல்லாமல் அதிக உணவை எடுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. எனவே இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு உணவில் கவனம் செலுத்தி சாப்பிட வேண்டும்.
சரியான தூக்கம்
7 Day Weight Loss Tips in Tamil: உடலுக்கு போதுமான தூக்கம் கிடைக்காத பொது உடல் எடை கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணி நேரம் தூங்குவது நல்லது. அதே போல் மதிய தூக்கத்தையும் தவிர்க்கவும். மதியம் சாப்பிட்ட உடனேயே நீண்ட நேரம் தூங்கும்போது உடல் எடை அதிகரிக்க கூடும்.
எண்ணெய் தின்பண்டங்களை தவிர்த்தல்
எண்ணெயில் பொரித்த எந்த தின்பண்டங்களையும் உண்ணக் கூடாது. இதில் குறிப்பாக சிக்கன் பகோடா, பஜ்ஜி, போண்டா போன்ற உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது மிகவும் நல்லது.
இனிப்புகளை தவிர்க்கவும்
7 Day Weight Loss Tips in Tamil: இனிப்பு பொருட்களை உட்கொள்ள தவிர்க்க வேண்டும். இவற்றை சாப்பிட்டால் கண்டிப்பாக உடல் எடை அதிகரிக்கும். உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால், இந்த வகை உணவுகளை தவிர்க்க வேண்டும்.
நடந்து செல்லுங்கள்
7 Day Weight Loss Tips in Tamil: அருகில் உள்ள கடைகளுக்கு செல்வதற்கெல்லாம் வண்டியை பயன்படுத்த வேண்டாம். முடிந்தவரை அடி அருகில் இருக்கும் இடங்களுக்கு நடந்து செல்லுங்கள். அதேபோல், மேல் தளங்களுக்கு செல்லும் போது லிப்டை பயன்படுத்த வேண்டாம். படிகளில் நடந்து செல்லுங்கள். தினமும் காலையில் நடைப்பயிற்சி செய்வது உடல் எடையை குறைக்க மிகவும் முக்கியமானது ஆகும்.
அழுத்தம் கொடுக்காதீர்கள்
வீட்டிலோ, வெளியிலோ ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு குறைகள் இருந்தால், அதைப்பற்றி எப்போதும் கவலைப்பட வேண்டாம். அவ்வாறான தேவையற்ற மன அழுத்தமானது நமது உடல் எடையை அதிகரிக்க செய்யும்.
யோகாசனம்
உடல் எடையை குறைப்பதற்காகவே யோகாவில் குறிப்பிட்ட ஆசனங்கள் உள்ளன. இவற்றை முறையாகக் கற்றுக்கொண்டு, தினமும் செய்து வந்தால், வியத்தகு பலன்களை அடையலாம்.
உடற்பயிற்சி செய்தல்
7 Day Weight Loss Tips in Tamil: உடல் எடையை குறைக்க உணவு எவ்வளவு முக்கியமோ அதே அளவு உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி மிகவும் முக்கியமான ஒன்றாகும். உடல் எடையை குறைக்க வேண்டுமானால் உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்க வேண்டும். அதற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். தினசரி உடற்பயிற்சி செய்வதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை (LDL கொலஸ்ட்ரால்) குறைத்து, உடலில் நல்ல கொழுப்பை (HDL கொலஸ்ட்ரால்) அதிகரிக்கிறது. இதனால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.
நடைப்பயிற்சி உடல் எடையைக் குறைக்கவும், அதோடு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள் வராமல் தடுக்கவும் உதவும். உடல் எடையை குறைக்க தினமும் 30 நிமிடங்கள் நடக்கவும். தினமும் முப்பது நிமிடம் சைக்கிள் ஓட்டுதல் (ஜிம் அல்லது வெளியில்) பயிற்சி செய்தால் அரை மணி நேரத்தில் 500 கலோரிகள் குறையும். (பயிற்சிகளுக்கு இடையில் சிறிது ஓய்வு அவசியம்) இந்த முப்பது நிமிட பயிற்சியை இரண்டு வாரங்களுக்கு செய்து வந்தால் உடல் எடை குறையும்.