வீட்டில் என்னென்ன பறவைகளை வளர்க்க கூடாது, வனத்துறை வழங்கும் பட்டியல்கள் | What birds should not be kept at home?

சினிமா நட்சத்திரம் ரோபோ சங்கர் அவர்கள் சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் வாழ்ந்து வருகிறார். அவருக்கு செல்லப்பிராணிகள் மீது பிரியம். இவர் தனது வீட்டில் நாய் பூனைகள் மற்றும் பறவைகள் போன்றவற்றினை வளர்த்து வருகிறார். இதனுடன், அலெக்சாண்டரியன் கிளியையும் வளர்த்தார். சமீபத்தில், ரோபோ சங்கர் அலெக்ஸாண்ட்ரியன் கிளியுடன் ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்த புகார் அடிப்படையில் ரோபோ சங்கர் வீட்டிற்கு வந்த வனத்துறையினர் அந்த கிளியை மீட்டனர். வனத்துறையினர் கிளியை மீட்டு அபராதம் விதித்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு வீட்டில் பறவைகளை வளர்த்து வரும் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். வீட்டில் பறவைகளை வளர்க்க முடியுமா? இனப்பெருக்க அனுமதி இருந்தால் என்ன பறவைகளை வளர்க்கலாம்? போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.

வீட்டில் வளர்க்க கூடாத பறவைகள் | What birds should not be kept at home? :

What birds should not be kept at home : இது குறித்து வனத்துறை அதிகாரியிடம் பேசியபோது, காதல் பறவைகளை செல்லப் பிராணிகளாக, வெளிநாட்டுப் பறவைகளை வீட்டில் வளர்க்கலாம். இப்போது இந்த கிளிகள் அழியும் தருவாயில் இருப்பதனால் இது போன்ற பறவைகளை வீட்டில் வைத்து வளர்ப்பதற்கு தடை (What birds should not be kept at home) செய்யப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் கிளிகளை வைத்து ஜோசியம் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. காட்டுப் பறவைகளை வளர்ப்பது பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதில்லை.

வனத்துறை அனுமதி அளித்தால் மட்டுமே வளர்க்க முடியும். வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972ன் கீழ் பறவைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சட்டத்தின் படி முதல் அட்டவணை மற்றும் நான்காவது அட்டவணையின் கீழ் வரிசைப்படுத்தப்பட்டுள்ள பறவைகளை வீட்டில் (What birds should not be kept at home) வளர்க்க கூடாது. வன உயிர் பாதுகாப்பு சட்டம், 1972ல் இயற்றப்பட்டது. இந்த சட்டம் பறவைகள் பூச்சிகள் தாவரங்கள் மற்றும் விலங்குகள் போன்றவற்றினை மனிதர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக போடப்பட்டது. சட்டம் நன்கு வரையறுக்கப்பட்ட அட்டவணைகளைக் கொண்டுள்ளது. இனத்தை வேட்டையாடுவதும் அழிப்பதும் தண்டனைக்குரிய குற்றம் என்று சட்டம் வலியுறுத்தியது. முதல் அட்டவணையில் அந்தமான் டீல், அசாம் மூங்கில் பேர்ட்ரிட்ஜ் போன்ற பறவைகள் முதல் அட்டவணையில் முக்கியமானவை ஆகும். இந்த பறவைகளை வீட்டில் வளர்ப்பது கட்டாய சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

நான்காம் அட்டவணை :

நான்காம் அட்டவணையில் உள்ள பறவைகளை வீட்டில் வைத்திருப்பது அபராதம்  விதிக்கப்படும். கட்டாய சிறைத்தண்டனை அல்ல. ஆனால் சிறையில் அடைக்க வாய்ப்புகள் உள்ளன.

நான்காம் அட்டவணையில் உள்ள பறவைகள் :

What birds should not be kept at home : Avadavat, Avocet, Babblers, Barbets, Barn Owls, Bitters, Brown Headed Gull, Bulbuls, Buntings, Bustorda, Bustard-Qualis, Chloropsis, Comb Duck, Coots, ஆகியவை நான்காவது அட்டவணையில் உள்ள பறவைகள் ஆகும். இவற்றை வீட்டில் வளர்க்கக் கூடாது.

சமீப காலமாக சில வீடுகளில் வெளிநாட்டு பறவைகள் வளர்க்கப்படுகின்றன. வெளிநாட்டு பறவைகளை இனப்பெருக்கம் செய்வதற்கு அழிந்து வரும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் மீதான சர்வதேச வர்த்தக ஒப்பந்தம் என்ற சர்வதேச அமைப்பிடம் அனுமதி பெறுவது அவசியம். எனவே, மேற்கூறிய பறவைகளை வீட்டில் வைக்கக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அப்படி வைத்திருந்தால் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறை தண்டனை விதிக்கப்படும்.

Latest Slideshows

Leave a Reply