WhatsApp Contact Syncing Update : Contact Syncing என்ற புதிய அம்சத்தை WhatsApp அறிமுகப்படுத்தவிருக்கிறது

WhatsApp ஆனது Contact Syncing என்ற புதிய அம்சத்தை (WhatsApp Contact Syncing Update) அறிமுகப்படுத்தவிருக்கிறது. இந்த புதிய அம்சம் ஆனது WhatsApp பயனர்களுடைய தனியுரிமையை வலிமைபடுத்தும் விதத்தில் அமைந்திருக்கும். தங்களுடைய வாடிக்கையாளர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்க்கும் வகையில் WhatsApp ஆனது புதிய Update-களை அவ்வவ்போது அறிமுகப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் பயனர்கள் Meta AI உடன் Voice Chat அம்சத்தையும் மற்றும் WhatsApp Update-களை மற்றவர்களுக்கு டேக் செய்து பதிவிடும் அம்சத்தையும் சமீபத்தில் அறிவித்து இருந்தது. இதனைத் தொடர்ந்து WhatsApp ஆனது Contact Syncing என்ற புதிய அம்சத்தை தற்போது அறிமுகப்படுத்த இருக்கிறது. இது WhatsApp பயனர்களின் தனியுரிமையை வலிமைப்படுத்தும்.

WhatsApp Contact Syncing Update - மொபைல் இல்லாமல் மற்ற Linked device சாதனங்களிலும் Contacts-ஐ சேர்க்கலாம் மற்றும் நீக்கலாம் :

WABetaInfo-ன் சமீபத்திய அறிக்கையின்படி, மொபைல் இல்லாமல் WhatsApp பயனர்கள் Contact Syncing என்ற புதிய அம்சத்தின் மூலம் Contacts-ஐ திருத்தலாம். WhatsApp வெளியிட்டுள்ள Contact Syncing என்ற புதிய அம்சம் ஆனது “Turn On Contacts, Delete Contacts” என்ற Tab மூலம் பயனர்கள் Linked Device-களில் தொடர்புகளை நிர்வகிக்க அனுமதிக்கிறது. அதாவது, Contact Syncing என்ற புதிய அம்சத்தின் மூலம் தங்கள் மொபைல் ஃபோன்களை நம்பாமல், WhatsApp பயனர்கள் தங்களது WhatsApp கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள எந்த சாதனத்திலிருந்தும் தொடர்புகளைச் சேர்க்கவும் மற்றும் நீக்கவும் முடியும்.

உதாரணமாக, Tablet மற்றும் Desktop-பில் WhatsApp-பைப் பயன்படுத்துபவர்கள், தங்கள் Contact List-ஐ மாற்றியமைக்க (WhatsApp Contact Syncing Update) முடியும். இப்படி செய்யப்படுகின்ற அந்த மாற்றங்கள் தானாகவே இணைக்கப்பட்ட அனைத்து சாதனங்களிலும் மாற்றப்படும். இந்த செயல்பாடுகள் ஆனது அனைத்து Device-களின் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு அனுபவத்தை வழங்குகிறது. Turn On Contacts டேபை பயன்படுத்துவதன் மூலம் மற்ற Device-களில் செய்யப்படும் கான்டாக்ட் மாற்றங்கள், அனைத்து Device-களிலும் மாற்றப்படும். Delete Contacts டேபை பயன்படுத்துவதன் மூலம் செய்யும் மாற்றங்கள் ஆனது மற்ற டிவைஸ்களில் மாற்றப்படாது.

மேலும் கிரிப்டோகிராஃபிக் ஹாஷ்களை WhatsApp-ல் பயன்படுத்தி இந்த Contact Syncing என்ற அம்சமானது பயனர்கள் தங்கள் அக்கவுண்ட்டை Delete செய்த பின் மீண்டும் Log In செய்யும்போதும் அனைத்து தொடர்பு எண்களையும் சேகரிக்க வழிவகை செய்கிறது. பயனர்கள் புதிதாக தொடர்பு எண்களை சேகரிக்க வேண்டிய அவசியமில்லை. பயனாளர்கள் இதை பெரிதும் வரவேற்றுள்ளனர். WhatsApp பயனர்கள் Laptop, Tab முதலிய மற்ற சாதனங்களில் WhatsApp கணக்கை பயன்படுத்தும்போது, தனித்தனியான தனியுரிமைகளை கொண்டிருப்பதாக எழுப்பப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டும் வகையில் இந்த Contact Syncing என்ற புதிய அம்சம் (WhatsApp Contact Syncing Update) வெளிவர உள்ளது.

Latest Slideshows

Leave a Reply