WhatsApp DP Feature Update - வாட்ஸ் அப்பில் வரப்போகும் புதிய அப்டேட்

வாட்ஸ்அப்பில் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மெட்டா நிறுவனம் ஒரு அம்சத்தை கொண்டு வர உள்ளது.

வாட்ஸ் அப் :

தகவல் தொடர்பு மற்றும் புதிய வெளியீடுகளுக்கு பல பயன்பாடுகள் இருந்தாலும், அவை அனைத்திற்கும் முன்னோடியாக WhatsApp உள்ளது. குறுஞ்செய்திகளை பரிமாறிக்கொள்ளும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த ஆப், அலுவலகங்களில் பாதி வேலைகளை அவர்கள் இருக்கும் இடத்திலிருந்தே செய்யும் அளவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஆப் மெட்டா குழுமத்தின் கீழ் வந்த பிறகு மேலும் மேலும் மேம்படுத்த பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது மெட்டா நிறுவனம் புதிய வசதியை (WhatsApp DP Feature Update) கொண்டு வரவுள்ளது. ஸ்பேம் எனப்படும் தேவையற்ற செய்திகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைச் சமாளிக்க, பயனர்கள் தங்கள் லாக் ஸ்கிரீனில் இருந்தபடியே அவற்றை பிளாக் செய்யலாம். இதன் மூலம், வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை அதிகப்படுத்தும் முயற்சியாக உள்ளது. இந்த அம்சத்தின் மூலம், பயனர்கள் ஸ்மார்ட்போனை அன்லாக் செய்யாமல் லாக் ஸ்கிரீனில் இருந்து நேரடியாக ஸ்பேம் செய்திகளைத் தடுக்கலாம். நீங்கள் வாட்ஸ்அப் மூலம் ஸ்பேம் செய்திகளைப் பெற்றால், உங்கள் லாக் ஸ்கிரீனில் அறிவிப்பைப் பெறுவீர்கள். பிளாக் ஆப்ஷனை கிளிக் செய்வதன் மூலம் அந்த நபரைத் தடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp DP Feature Update :

இந்நிலையில், வாட்ஸ் அப்பில் பயனர்கள் தங்களது DP போட்டோவை ஸ்கிரீன்ஷாட் எடுப்பதை தடுக்கும் வகையில் புதிய வசதியை (WhatsApp DP Feature Update) மெட்டா கொண்டுவர உள்ளது. ஏற்கனவே, விருப்பப்பட்ட வாட்ஸ்அப் பயனர்களுக்கு மட்டுமே அவர்களின் புகைப்படத்தைக் காண்பிக்கும்படி வசதி உள்ளது. நமது (DP) புகைப்படம் மற்றவர்களுக்குக் காட்டப்படாது. இந்த அம்சம் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு அவர்களின் அனுமதியின்றி தனது புகைப்படங்களை எடுப்பதைத் தடுக்க உதவுகிறது. ஏற்கனவே, இன்ஸ்டாகிராம், கூகுள் பே, பேடிஎம், போன் பே உள்ளிட்ட ஆப்களில் இந்த வசதி உள்ளது, தற்போது மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பிலும் கொண்டு வர உள்ளது. மேலும், இந்த அம்சம் (WhatsApp DP Feature Update) முதலில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கிடைக்க பெற விரைவில் ஐபோன் பயனர்களுக்கும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply