Whatsapp Messages Just By Talking : பேசினாலே அதை மெசேஜ்களாக மாற்றக்கூடிய ஒரு அட்டகாசமான வசதி

Whatsapp Messages Just By Talking :

Whatsapp ஆனது  உலகளவில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் முக்கியமான மெசேஜிங் செயலியாக இருக்கிறது. சுமார் 53 கோடி மக்கள் இந்தியாவில் Whatsapp பயன்படுத்துகின்றனர். AI பயன்பாட்டுக்கு வந்த பிறகு மக்கள் அதிகம் பயன்படுத்தும் Whatsapp மற்றும் X உள்ளிட்ட Apps புதிய அப்டேட்டுகளை கொண்டு வந்து தொடர்ந்து அசத்திக் கொண்டிருக்கின்றன. இதுவரை மனிதர்கள் கற்பனை செய்து கூட பார்த்திடாத தொழில்நுட்ப அற்புதங்களை Users எல்லாம் சுலபமாக பயன்படுத்தும் வகையில் Update ஆகவும் அந்த நிறுவனங்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

WhatsApp நிறுவனம் யூசர்களுக்கு ஒரு மேம்பட்ட அனுபவத்தைத் தனது செயலியில் தொடர்ச்சியாகப் பல அட்டகாசமான வசதிகளைக் கொடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே, அந்த வகையில் Whatsapp App-ல் புதிய Update ஒன்று விரைவில் வர இருக்கிறது. இது யூசர்கள் மெசேஜ் செய்யும் அனுபவத்தை மொத்தமாகப் புரட்டிப் போடுவதாக இருக்கிறது. WhatsApp நிறுவனம் நாம் பேசினால் அதை அப்படியே Text-டாக டைப் செய்யும் (Whatsapp Messages Just By Talking) அட்டகாசமான ஒரு வசதியைக் (அம்சத்தை) கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது யூசர்களுக்கு நீண்ட மெசேஜ் அனுப்பச் சோம்பேறித்தனமாக இருக்கிறது என்றால், யூசர்கள் Voice Notes அனுப்பினாலே போதுமானது. வாட்ஸ்அப் செயலியே Voice Notes-ஐ மெசேஜாக மாற்றி டைப் செய்து கொள்ளுமாம். அது ஒரு நீண்ட மெசேஜ்ஜாக இருந்தாலும், அதை யூசர்கள் சொல்லச் சொல்ல WhatsApp செயலியே டைப் செய்து கொள்ளுமாம். இந்த புதிய Update (வசதி) இன்னும் முழுமையாக ரெடியாகவில்லை. வல்லுநர்கள் இது இன்னும் Development Stage-லேயே இருப்பதாக குறிப்பிடுகிறார்கள். அனைவருக்கும் இந்த வசதியை அறிமுகப்படுத்த (Release) செய்ய இன்னும் சில காலம் ஆகும் (Whatsapp Messages Just By Talking) என்றே வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

WhatsApp Changing Language - மொழியை மாற்றும் வாட்ஸ் அப் :

WhatsApp நிறுவனம் நாம் பேசினால், மொழியை மாற்றும் வசதியையும் அவர்கள் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர். அதாவது யூசர்கள் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் என்றால் அதை வேறு ஒரு மொழியிலும் மொழிமாற்றம் செய்ய முடியும். மேலும் யூசர்கள் தமிழில் பேசினால் போதும், அதை ஆங்கிலம் உட்பட எந்தவொரு மொழியிலும் டெக்ஸ்டாக மாற்ற முடியும். ஆங்கிலம், ஸ்பானிஷ், போர்த்துகீசியம் (பிரேசில்), ரஷ்ய மொழி மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் மட்டும் முதற்கட்டமாக இப்படி மொழிமாற்றம் செய்யும் வசதி கொண்டு வரப்பட இருக்கிறது.

Latest Slideshows

Leave a Reply