WhatsApp New Feature : இனி WhatsApp-ல் மளிகை பொருட்கள் ஆர்டர் செய்வது கார் புக்கிங் செய்வது எனப் மேம்பட்ட வசதிகள்
WhatsApp New Feature :
இதற்குமுன் வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்புவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது ஆனால் தற்போது இந்த ஆப் மூலம் மளிகை பொருட்கள் ஆர்டர் செய்யலாம் மற்றும் உபர் கார் புக்கிங் செய்யலாம். Meta நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு அம்சங்களை அறிமுகம் (WhatsApp New Feature) செய்து வருகிறது.
1. வாட்ஸ்அப்-ல் கார் புக்கிங் செய்வது எப்படி?
- WhatsApp New Feature : வாட்ஸ்அப் மூலம் உபர் கார் புக்கிங் செய்யலாம். இதற்காக உபர் செயலி டவுன்லோடு செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாக Uber கார் புக்கிங் சேவையைப் பெறலாம்.
- உங்கள் மொபைல் போனில் 7292000002 என்ற எண்ணை முதலில் Save செய்யவும்.
- இப்போது வாட்ஸ்அப் பக்கம் சென்று இந்த எண்ணிற்கு ‘ஹாய்’ என மெசேஜ் அனுப்பவேண்டும்.
- பிறகு உங்கள் பிக்அப் இடம் மற்றும் சேரும் இடத்தை இதில் தெரிவிக்கவும்.
- இப்போது இதற்கான கட்டணம் மற்றும் டிரைவர் முழு விவரங்கள் கொடுக்கப்படும்.
2. வாட்ஸ்அப்-ல் மெட்ரோ டிக்கெட் புக்கிங் செய்வது எப்படி?
- WhatsApp New Feature : அடுத்து வாட்ஸ்அப் மூலம் சுலபமாக மெட்ரோ ரயில் டிக்கெட்டும் புக் செய்யலாம். இதன் மூலம் வரிசையில் நின்று டிக்கெட் எடுப்பதற்கான நேரம் மற்றும் சில்லறை பெறுவது உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை தவிர்க்கலாம்.
- ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கலாம். டெல்லியில் இது எற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் சென்னையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
3. வாட்ஸ்அப்-ல் மளிகை பொருட்கள் எப்படி ஆர்டர் செய்வது?
WhatsApp New Feature : வாட்ஸ்அப்-ல் JioMart மூலம் மளிகைப் பொருட்களை வாங்கலாம். ஜியோ மார்ட் ஒரு வாட்ஸ்அப் ஆர்டருக்கு 30% ரூ.120 வரை தள்ளுபடி வழங்குகிறது. வாட்ஸ்அப்-ல் மளிகை பொருட்கள் எப்படி ஆர்டர் செய்வது.
- JioMart எண் +91 79770 79770 உங்கள் மொபைல்போனில் பதிவு செய்யவும்.
- உரையாடலைத் தொடங்க ‘ஹாய்’ என்று செய்தி அனுப்பவும்.
- இப்போது நீங்கள் அதில் கொடுக்கப்படும் பொருட்ளை அல்லது உங்கள் தேவையான பொருட்களை தேடலாம்.
- உங்களுக்கு தேவையான பொருட்களை Cart-ல் Add செய்யவும்.
- இப்போது Proceed To Checkout கொடுத்து வாட்ஸ்அப் பே UPI மூலம் பணம் செலுத்தவேண்டும்.
4. வாட்ஸ்அப்-ல் சுகாதார சேவை பெறுவது எப்படி?
- இந்தியாவில் கிராமப் புறங்களில் பொது சுகாதார அணுகல் ஒரு பெரிய சவாலாக உள்ளது. இதைத் தீர்க்க உதவும் வகையில் வாட்ஸ்அப் மூலம் (CSC) “ஹெல்த் சர்வீசஸ் ஹெல்ப் டெஸ்க்” தொடங்கப்பட்டுள்ளது.
- இதில் நூற்றுக்கணக்கான பயனர்களுக்கு டெலிஹெல்த் ஆலோசனைகள் மற்றும் அரசாங்க சுகாதாரத் திட்டங்கள் மற்றும் பல சேவைகள் வழங்கப்படுகிறது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது இங்கே பார்க்கலாம்.
- உரையாடலைத் தொடங்குவதற்கு +917290055552 என்ற எண்ணிற்கு முதலில் ‘ஹாய்’ என மெசேஜ் செய்யவும்.
- அதன் பிறகு உங்களுக்கு என்ன சேவைகள் தேவை என்பதை மெனுவிலிருந்து தேர்வு செய்யவும்.
- அடுத்து அதில் வரும் விவரங்களை கொடுத்து மருத்துவரின் ஆலோசனைகளைப் இலவசமாக பெறலாம்.
Latest Slideshows
-
OnePlus 13 & 13R Phone Replacement : ஒன்பிளஸ் 13 & 13R போன்களுக்கு ரிப்ளேஸ்மெண்ட் திட்டம்
-
2024-25 GDP Growth Down : 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது
-
Pongal Festival 2025 : பொங்கல் பண்டிகையின் வரலாறும் & கொண்டாட்டமும்
-
Game Changer Review : கேம் சேஞ்சர் திரைப்படத்தின் திரை விமர்சனம்
-
Retro Release Date Announced : சூர்யா நடிக்கும் ரெட்ரோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
-
Open Secret CEO : அஹானா கௌதமின் வெற்றிப் பயணம்
-
Interesting Facts About Honey Bee : தேனீக்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்
-
Flipkart Monumental Sale 2025 : பிளிப்கார்ட் நிறுவனம் குடியரசு தின சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது
-
V Narayanan Appointed As New ISRO Chief : இஸ்ரோவின் 11-வது தலைவராக தமிழக்தை சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்
-
Sandi Keerai Benefits In Tamil : சண்டிக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்