Why KL Rahul Dropped : கே.எல் ராகுல் ஏன் உலக கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டார்?

மும்பை :

டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் 15 பேர் இடம் பெற்றுள்ளனர். பல மூத்த வீரர்கள் விடுபட்டுள்ளனர். குறிப்பாக, டி20 உலகக் கோப்பையில் வழக்கமான தொடக்க வீரராக களமிறங்கிய கேஎல் ராகுல் தற்போது (Why KL Rahul Dropped) நீக்கப்பட்டுள்ளார். கேஎல் ராகுலுக்குப் பதிலாக ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.

அஜித் அகர்கர் :

அதேபோல் ரிசர்வ் வீரராக கில் அறிவிக்கப்பட்டுள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், கே.எல்.ராகுலை நீக்கியதற்கான காரணத்தை (Why KL Rahul Dropped) விளக்கினார். அப்போது பேசிய அவர், ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுல் தொடக்க ஆட்டக்காரராக செயல்பட்டு வருகிறார்.

Why KL Rahul Dropped :

மிடில் ஆர்டரில் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தோம். மேலும் மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். சஞ்சு சாம்சனை பேட்டிங் வரிசையில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். எனவே நாங்கள் எங்களுக்குத் தேவைக்கேற்ப அணியைத் தேர்ந்தெடுத்தோம், அவரை விட அவர் சிறந்தவர் என்று நாங்கள் அணியைத் தேர்வு செய்யவில்லை. கேஎல் ராகுல் தொடக்க ஆட்டக்காரராகக் கருதப்பட்ட நிலையில், அவர் இப்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் விளையாடுகிறார்.

எனவே, கேஎல் ராகுலை மிடில் ஆர்டரில் விளையாட பிசிசிஐ தேர்வுக் குழு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் டி20 கிரிக்கெட்டில் ஓப்பனராக வருவேன் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார் கேஎல் ராகுல். இந்த சூழலில், கே.எல்.ராகுலின் ஸ்ட்ரைக்-ரைட் என்பதும் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. ராகுலை விட ஜெய்ஸ்வால் ஸ்டிரைக் ரேட் அதிகமாக இருந்தால் கேஎல் ராகுலின் இடம் இப்போது காலியாக உள்ளது. தேர்வுக் குழுவின் பேச்சைக் கேட்டிருந்தால், மிடில் ஆர்டரில் கே.எல்.ராகுலுக்கு ஆட வாய்ப்பு கிடைத்திருக்கும்.

Latest Slideshows

Leave a Reply