Wipro CEO Srinivas Balia : Srinivas Balia Wipro-ன் M.D மற்றும் CEO-ஆக பதவியேற்றார்

கடந்த April 6, 2024 அன்று இரவு 7 மணிக்கு முடிவடைந்த Wipro-வின் கூட்டத்தில், நியமனம் மற்றும் ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, இயக்குநர்கள் குழு ஆனது  திரு. ஸ்ரீனிவாஸ் பாலியாவை CEO மற்றும் M.D இயக்குநராக (Wipro CEO Srinivas Balia) நியமித்துள்ளது. இந்த நியமனம் April 7, 2024 முதல் 5 வருட காலத்திற்கு, ஒப்புதல் பங்குதாரர்கள் மற்றும் அரசாங்கத்தின் மத்திய அரசின் அனுமதிக்கு உட்பட்டது ஆகும் என்று நிறுவனத்தின் ஒழுங்குமுறை தாக்கல் கூறுகிறது. விப்ரோவின் குழு நிர்வாக கவுன்சில் மற்றும் உள்ளடக்குதல் மற்றும் பன்முகத்தன்மை கவுன்சிலில் உறுப்பினராக உள்ளார்.

Wipro CEO Srinivas Balia-வின் பின்னணி (Wipro CEO Srinivas Balia)

பெங்களூரில் உள்ள IIT-ல் B.E., பட்டம் பெற்றவர். பின், மேலாண்மைப் படிப்பில் Ph.d பட்டம் பெற்றார். Harvard Busines School of Management-ல் குளோபல் பிசினஸ் எக்ஸிகியூட்டிவ் புரோகிராம்  மற்றும் McGill Executive Institute-ல் மேம்பட்ட தலைமைத்துவ திட்ட நிர்வாகப் படிப்பையும் முடித்துள்ளார்.

Srinivas Balia 30 ஆண்டுகளுக்கு மேலாக விப்ரோவில் பணியாற்றியவர். 1992 -ல் விப்ரோவில் ஒரு தயாரிப்பு மேலாளராக திரு.பல்லியா தனது தொழில் பயணத்தைத் தொடங்கியவர் நுகர்வோர் வணிகப் பிரிவின் தலைவர் மற்றும் RCTG வணிகப் பிரிவின் தலைமை நிர்வாகி, வணிக பயன்பாட்டுச் சேவைகளின் தலைவர் என பல்வேறு தலைமைப் பொறுப்புகளை வகித்துள்ளார். பல்வேறு துறைகளுக்குத் தலைமை தாங்கிய  திரு பல்லியா விரிவான நிறுவன மற்றும் தொழில்துறை அறிவு கொண்டவர்.  அவற்றின் நோக்கங்களை வகுத்து, வளர்ச்சி உத்திகளைத் திறமையாக செயல்படுத்தினார். விப்ரோ  நிறுவனத்தின் சந்தை மதிப்பு அதிகரிக்க உதவியவர் என்று விப்ரோ புகழாரம் சூட்டியிருக்கிறது. விப்ரோவில் கடந்த 4 ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்திய பிறகு வருகிறார் என்று விப்ரோ தெரிவித்துள்ளது. Business Today 2008 ஆம் ஆண்டில் ஸ்ரீனி பாலியாவை இந்தியாவின் தலைசிறந்த 25 இளம் வணிக நிர்வாகிகளில் ஒருவராக கௌரவித்தது.

CEO-வாக நியமனம் செய்யப்பட்டது குறித்து ஶ்ரீனிவாஸ் பாலியா, “லாபத்தையும் நோக்கத்தையும் இணைத்து செயல்படும் அரிய நிறுவனங்களில் Wipro நிறுவனமும்   ஒன்று ஆகும். Wipro நிறுவனத்தை வழிநடத்த தேர்வு செய்யப்பட்டதற்கு நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். விப்ரோ லிமிடெட் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி, ஶ்ரீனிவாஸ் பாலியாவின் தலைமை மீது நம்பிக்கை உள்ளது. வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட அவரது அணுகுமுறை, வளர்ச்சி மனப்பான்மை, செயல்பாடுகளை வலுவாக்குதல் மற்றும் விப்ரோவுடன் அவருக்கு இருக்கும் அர்ப்பணிப்பு ஆகிய காரணங்களால் அவர் தலைமைப் பொறுப்புக்குச் சரியான தேர்வு ஆவார் என்று கூறியிருக்கிறார்.

நல்ல ஓட்டத்தை விரும்பும் ஶ்ரீனிவாஸ் பாலியா ஃபிட்னஸ் வெறியர். வர், ஓட்டம், ஜிம்மில் ஒர்க் அவுட் அல்லது டென்னிஸ் விரைவு விளையாட்டிற்குச் செல்ல அட்டவணையில் எப்போதும் நேரத்தை உருவாக்குகிறார். அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வசித்து வரும் ஸ்ரீனிவாஸ் பாலியா தொடர்ந்து  நியூ ஜெர்சியில் இருந்தே CEO பணியை கவனிப்பார். நிறுவனத்தின் தலைவர் ரிஷாத் பிரேம்ஜியுடன் இணைந்து ஸ்ரீனிவாஸ் பாலியா செயல்பட உள்ளார்.

Latest Slideshows

Leave a Reply