WOH G64 New Galaxy Discovered : சூப்பர் நோவா நிகழ்வுக்கு தயாராகி வரும் விண்மீனை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

நமது சூரிய குடும்பத்தின் பால்வெளிக்கு வெளியே சூப்பர் நோவா நிகழ்வுக்காக தயாராகி வரும் ‘WOH G64’ என்ற புதிய விண்மீனை (WOH G64 New Galaxy Discovered) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

WOH G64 விண்மீன்

சூப்பர் நோவாவாக மாறும் நட்சத்திரம் தனது எரிபொருள் தீர்ந்ததும் பல மடங்கு விரிந்து பெரிதாகும். மேலும் பல மடங்கு வேகமாக சுழலும் திறன் கொண்டதாகும். வேகமாக சுழலும் பொழுது இந்த நட்சத்திரம் அருகில் இருக்கும் சிறு கோள்களை விழுங்கி தூசி மற்றும் வாயுக்களை வெளியேற்றும். இப்படி எரிபொருள் தீர்ந்துவிட்டு, வாயு மற்றும் தூசியை வெளியேற்றிக்கொண்டு சூப்பர் நோவாவாக மாறுவதற்கு தயாராக இருக்கும் WOH G64 என்ற விண்மீனை தற்போது (WOH G64 New Galaxy Discovered) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சூரியனை விட 2000 மடங்கு பெரியது

இந்த WOH G64 நட்சத்திரம் நமது பால்வெளி மண்டலத்திற்கு வெளியே சுமார் 160000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கும் ‘மாகெல்லானிக் கிளவுட்ஸ்’ என்ற நட்சத்திர மண்டலத்தில் உள்ளது. மேலும் இந்த விண்மீன் நமது சூரியனை விட அளவில் 2000 மடங்கு பெரியதாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய நட்சத்திரத்தை ‘பெஹிமோத் நட்சத்திரம்’ என பெயர் வைத்து (WOH G64 New Galaxy Discovered) விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். இந்த WOH G64 விண்மீனை ஐரோப்பிய பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆண்ட்ரெஸ் பெல்லோவை சேர்ந்த கெய்ச்சி ஓனகா தலைமையில் “இண்டர்ஃபெரோ” தொலைநோக்கியின் உதவியுடன் கண்டுபிடித்துள்ளனர்.    

ஐரோப்பிய பல்கலைக்கழக பேராசிரியர்கள் இது குறித்து கூறியதாவது முட்டை வடிவம் கொண்ட கொக்கூன் நட்சத்திரத்தை WOH G64 நட்சத்திரம் (WOH G64 New Galaxy Discovered) மிக நெருக்கமாக சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் கடந்த பத்து வருடங்களில் இந்த நட்சத்திரம் குப்பைகளால் மங்கி வருகிறது எனவும் அடுத்த 10 ஆண்டுகளில் மேலும் மங்கலாம் எனவும் தெரிவித்தனர்.

Latest Slideshows

Leave a Reply