Wolf Movie Teaser: பிரபுதேவாவின் Wolf திரைப்படத்தின் டீசர் வெளியீடு...

Wolf Movie Teaser :

எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வினு வெங்கடேஷ், ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தற்போது “Wolf” படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கிறார். இது பிரபுதேவாவின் 60-வது படம் ஆகும். மேலும், இந்தப் படத்தில் பிரபுதேவாவுடன் அனுசுயா பரத்வாஜ், ராய் லட்சுமி, வசிஷ்ட சிம்ஹா, ஆர்.ஜே.ரமேஷ், அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

வரலாற்று காலத்தில் இருந்து இன்றுவரை பயணிக்கிறது. இதை அறிவியல் புனைகதையாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் வினு வெங்கடேஷ். படத்தின் கதைப்படி ஹீரோ, வில்லன் ஆகிய இருவருமே ஓநாய்க்கு உரிய குணாதிசயங்களைக் கொண்டிருப்பார்கள். இதில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் கதை. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

“Wolf” படத்தின் மோஷன் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது பரபரப்பான காட்சிகளுடன் டீசர் வெளியாகியுள்ளது. ஒரு நிமிடம் ஓடும் டீசரில், பெண் சாமியார்கள் இருக்கும் மர்மமான இடத்தில் பிரபுதேவா சிக்கிக் கொள்வதும், அங்கு என்ன நடக்கிறது என்பதைக் கண்டுபிடித்து அங்கிருந்து தப்பிப்பதும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக்‌ஷன் காட்சிகள், திகில் காட்சிகள், சஸ்பென்ஸ் என இப்படத்தின் டீசர் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் தயாராகும் இப்படத்திற்கு அம்பரீஷ் இசையமைக்க, அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில் கிஷோர் படத்தொகுப்பு பணியில் உருவாகி உள்ளது. இந்நிலையில் தற்போது டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

Latest Slideshows

Leave a Reply