Women Test Cricket - ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது

Women Test Cricket - ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய மகளிர் கிரிக்கெட் அணிபெற்ற முதல் வெற்றி :

இந்தியாவில் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி ஆனது சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு Test Match, மூன்று Oneday Matches மற்றும் மூன்று T20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி (Women Test Cricket) வருகின்றது. ஆஸ்திரேலியா – இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி (Women Test Cricket) ஆனது மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 4 ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி ஆனது வெற்றி பெற்றது. இதில் முதலாவதாக Test Match போட்டி நடைபெற்றது. ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட் செய்தது. ஆஸ்திரேலியா 219 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சில் ஆல் அவுட்டானது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தஹிலா மெக்ரத் அரை சதம் அடித்தார். இந்தியா சார்பில் ஆடிய பூஜா வஸ்த்ராகர் 4 விக்கெட்டும், ஸ்நே ரானா 3 விக்கெட்டும் மற்றும் தீப்தி ஷர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 406 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இந்தியாவைச் சேர்ந்த  4 வீராங்கனைகள் அரை சதம் கடந்து அடித்தனர். ஆஸ்திரேலியா சார்பில் ஆடிய கார்ட்னர் 4 விக்கெட்டும், கிம் கார்த்  2 விக்கெட்டும் மற்றும் சதர்லெண்ட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, ஆஸ்திரேலியா 187 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸ் ஆடி  261 ரன்களில் ஆல் அவுட்டானது. மூத்த வீராங்கனை தஹிலா மெக்ராத் 2வது இன்னிங்ஸ்ஸில் பொறுப்புடன் விளையாடி 177 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினார்.

இந்தியா சார்பில் ஆடிய ஸ்நே ரானா 4 விக்கெட்டும், ஹர்மன்பிரீத் கவுர்  2 விக்கெட்டும் மற்றும் கெய்க்வாட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, இந்தியா 2வது இன்னிங்ஸ்ஸில் 75 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடி 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன்களை எடுத்து (Women Test Cricket) வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடரையும் இந்தியா கைப்பற்றி உள்ளது. இந்த வெற்றி ஆனது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியா பெற்ற முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய மகளிர் கிரிக்கெட் அணிபெற்ற முதல் (Women Test Cricket) வெற்றி ஆகும். 

Latest Slideshows

Leave a Reply