Womens T20 World Cup இந்திய அணி அபார வெற்றி

Womens T20 World Cup – ல் பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் இந்திய அணியானது பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியானது அபார வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் நடைபெற்ற ஐசிசி Womens T20 World Cup போட்டியில் இந்திய அணியானது பாகிஸ்தானை எதிர்கொண்டது. கேப் டவுனில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கத்திலேயே இந்திய பந்து வீச்சாளர்கள் அதிர்ச்சியை கொடுத்தனர்.

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீராங்கனைகளான முனீபா அலி 12 ரன்களும் மற்றும் ஜவேரியா கான் 8 ரன்களை எடுத்து அடுத்தடுத்து ஆட்டத்தை இழந்தனர். இவர்களை தொடர்ந்து வந்த நிதார் தார் ரன்கள் அடிக்காமலே ஆட்டத்தை இழந்தார். அமீன் 11 ரன்களில் அவுட் ஆனார். பாகிஸ்தான் அணியானது 68 ரன்களில் 4 விக்கெட்களை இழந்தது. இந்த அணியின் கேப்டன் மரூஃப் மற்றும் ஆயிஷா நசீம் இருவரும் சேர்ந்து ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மரூஃப் 68 ரன்களும், ஆயிஷா நசீம் 43 ரன்களும் அடித்தனர். கடைசி நேரத்தில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 149 ரன்களை பாகிஸ்தான் அணியானது குவித்தது.

இதனை தொடர்ந்து 150 ரன்கள் அடித்தல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியானது 151 ரன்கள் எடுத்து எளிமையாக ஆட்டத்தை வென்றது. இந்திய வீராங்கனை ஜெமீமா ரோட்ரிக்ஸ் 53 ரன்களும், ஷஃபாலி வெர்மா 33 ரன்களும், ரிச்சா கோஷ் 31 ரன்களும், கவர் 16 ரன்களும் எடுத்தனர். 20 ஓவரில் மீதம் ஒரு ஓவர் இருக்கும் நிலையில் 7 விக்கெட் வித்யாசத்தில் இந்திய அணியானது வெற்றிபெற்றது. இந்த போட்டியில் அரை சத்தம் அடித்து அவுட்டாகாமல் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஜெமீமா ரோட்ரிக்ஸ் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Latest Slideshows