சென்னையில் Wonderla Theme Park விரைவில் அமைய உள்ளது

Wonderla Theme Park :

இந்தியாவின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு பூங்காக்களில் ஒன்று வொண்டர்லா எனும் பொழுதுபோக்கு பூங்கா ஆகும். தற்போது, ​​இந்தியாவில் வொண்டர்லாவின் தீம் பூங்காக்கள் ஆனது பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கொச்சி ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே உள்ளன. புவனேஸ்வரில் வொண்டர்லா தற்போது தனது 4-வது கிளையை தொடங்கி பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில், பொதுவாக கோவையில் Black Thunder, மதுரையில் அதிசயம் மற்றும் சென்னையில் MGM போன்ற ஒரு சில பிரபல பொழுதுபோக்கு பூங்காக்களே உள்ளன. வொண்டர்லா தீம் பூங்கா ஒடிசாவில் புதிதாக அமைக்கப்பட்டு வருவதை தொடர்ந்து தமிழ்நாட்டில் சென்னை அருகே ‘Wonderla Theme Park’ அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு ஆனது சென்னையின் புறநகர்ப் பகுதியில் கணிசமான பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைக்கப்படுவதை உள்ளடக்கிய சுற்றுலாத் துறையின் விரிவாக்கத்திற்கு முழுமுனைப்புடன் ஆதரவை அளித்து வருகிறது.

தமிழகத்தில் சென்னையில் ‘Wonderla Theme Park’ பொழுதுபோக்கு பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு ஆனால் நீண்ட காலமாக வரி சிக்கல் மற்றும் பல்வேறு காரணங்களால் நிறைவேற்றப்படாமல் போனது. 08/03/2024 நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டு உள்ளதால் விரைவில் இதற்கான விரிவான திட்டம் வகுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வொண்டர்லாவின் இந்த திட்டம் ஆனது அரசாங்க முன்முயற்சிகளுடன் தடையின்றி ஒத்துப்போகிறது. மேலும் அத்தியாவசிய அனுமதிகள் மற்றும் ஒப்புதல்கள் இப்போது கையில் கிடைத்துள்ளதால், நிறுவனம் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தீம் பார்க் (Wonderla Theme Park) கட்டுமானத்தில் முன்னேறத் தயாராக உள்ளது.

சென்னை அருகே தமிழக அரசு ஆனது 62 ஏக்கரில் ரூ.400 கோடி செலவில் புதிதாக வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா (Wonderla Theme Park) அமைக்க ஒப்புதல் வழங்கி உள்ள நிலையில் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவுக்கான பூமிபூஜை ஆனது தற்போது முடிந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர் தாலுகாவில் உள்ள இள்ளளூர் கிராமத்தில் 62 ஏக்கரில் ரூ.400 கோடி செலவில் ‘Wonderla Theme Park’ அமைக்கப்பட உள்ளது. இந்த இள்ளளூர் கிராமம் பழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கிறது. இதனால் சென்னை அருகேயே ‘வொண்டர்லா’ பொழுது போக்கு பூங்கா (Wonderla Theme Park) அமைய உள்ளது. இதனால் நிச்சயம் நல்ல வரவேற்பு இருக்கும் என கூறப்படுகிறது. வரும் நாட்களில் ‘வொண்டர்லா’ கட்டுமான பணிகள் என்பது தொடங்கி நடைபெற உள்ளது. 2 முதல் 3 ஆண்டுகளில் முழுமையாக கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என நிறுவனத்தின் தலைமை இயக்குனர் அருண் கே சிட்டாபில்லி தெரிவித்து உள்ளார்.

Latest Slideshows

Leave a Reply