World Athletics Championships: தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா..

உலகளவில் தடகள சாம்பியன்ஷிப் (World Athletics Championships) தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே ஈட்டி எறிதல் போட்டியில் ஒலிம்பிக்கில் தங்கம் என்ற நீரஜ் சோப்ரா இந்தியாவிற்காக களம் இறங்கினார். இந்த தொடரிலும் முதல் பரிசை வென்று இவர் வரலாற்று சிறப்புமிக்க சாதனை படைத்துள்ளார்.

உலக தடகள சாம்பியன்ஷிப் (World Athletics Championships):

உலக தடகள சாம்பியன்ஷிப் (World Athletics Championships) தொடர்கள் இந்த வருடம் ஹங்கேரி நாட்டில் நடைபெற்று வருகிறது. இதுவரை உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா வெறும் இரண்டு பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது. இறுதியாக 2003 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்த தொடரில் நீளம் தாண்டுதல் போட்டியில் அஞ்சு ஜார்ஜ் என்பவர் மூன்றாவது இடத்தை பெற்று வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார். இதுதான் இந்தியா உலகத் தடகளப் போட்டிகளில் வென்ற முதல் பதக்கம் ஆகும்.

இதன்பிறகு கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா அவர்கள் இரண்டாவது இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த நிலையில் இந்த வருடத்திற்கான உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே முன்னேறி இருந்தார் நீரஜ்  சோப்ரா. இவர் மட்டுமல்லாமல் இவருடன் இன்னும் இரண்டு இந்திய வீரர்களும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருந்தனர்.

இதனால் இந்தியாவிற்கு இந்த முறையும் கண்டிப்பாக ஏதேனும் ஒரு பதக்கம் கிடைக்கும் என்று ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர். ஆனால் நம்பிக்கை நாயகன் நீரஜ் சோப்ரா கண்டிப்பாக தங்கம் வெல்வார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

மிகவும் எதிர்பார்ப்புக்கு தகுந்த இந்த போட்டி நேற்று இரவில் நடைபெற்றது. இதில் பல்வேறு வீரர்கள் ஆக்ரோஷமாக ஈட்டியை எறிந்தனர். பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 87 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்தார். இதன் பிறகு இரண்டாவது முயற்சியிலேயே சோப்ரா அவர்கள் 88.17 மீட்டர் தூரம் ஈட்டியை எரிந்து முதல் இடத்தை பிடித்தார். இந்த தூரத்தை இறுதிவரையில் எவராலும் தாண்ட முடியவில்லை.

இதனால் உலக தடகள சாம்பியன்ஷிப் (World Athletics Championships) தொடரில் இந்தியா முதல் முறையாக தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கத்தை வாங்கிக் கொடுத்த அதே தங்க மகன் நீரஜ் சோப்ரா அவர்கள் இந்தத் தொடரிலும் முதல் தங்கத்தை இந்தியாவிற்காக வாங்கி கொடுத்து நமது நாட்டை பெருமைப்படுத்தி உள்ளார்.

ஏற்கனவே இவர் காமன்வெல்த் தொடர், ஆசிய போட்டிகள், ஒலிம்பிக் போன்ற தொடர்களில் தங்கம் வென்று அசத்திய இவரது சாதனை உலக தடகள சாம்பியன்ஷிப் (World Athletics Championships) தொடரிலும் தொடர்கிறது. உலக அளவில் இந்தியாவிற்கு பெருமையை தேடித் தந்துள்ள இவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Latest Slideshows

Leave a Reply