World Cancer Day : உலக புற்றுநோய் தினமும் அதன் முக்கியத்துவமும்

உலக அளவில் மக்கள் மத்தியில் புற்றுநோய் (Cancer) ஒரு முக்கிய சுகாதார பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இந்த புற்றுநோயின் தாக்கம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் உலக புற்றுநோய் தினம் (World Cancer Day) ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும் இந்த தினத்தை 2000 ஆம் ஆண்டு முதல் அந்தோனி பெர்னாடினோ தலைமையிலான உலகப் புற்றுநோய் அமைப்பு Union for International Cancer Control (UICC) கடைபிடித்து வருகிறது. இந்த புற்றுநோய் தினம் கடைப்பிடிக்கப்படுவதன் முக்கிய நோக்கம் புற்றுநோயால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவது மற்றும் இந்த நோயை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேம்படுத்துவது மற்றும் உலக அளவில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் கல்வியை புகட்டுவது, நோய் தடுப்புக்கான சீரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வைப்பது இந்த நாளின் நோக்கமாகும்.

புற்றுநோயின் தாக்கம்

மனித உடலில் செல்கள் கட்டுப்பாடற்ற முறையில் பெருக்கம் அடைவதன் விளைவாக புற்றுநோய் உருவாகிறது. புற்றுநோய்களில் இரத்த புற்றுநோய், மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் என பல வகைகள் உள்ளன. பெரும்பாலும் புற்றுநோய் மோசமான உணவு பழக்கவழக்கம், புகைபிடித்தல், மது அருந்துதல், மரபணு மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகிய காரணிகளால் (World Cancer Day) ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2020-ம் ஆண்டில் மட்டும் புற்றுநோய் காரணமாக ஒரு கோடி நபர்கள் இறந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

உலக புற்றுநோய் தினத்தின் முக்கியத்துவம் (World Cancer Day)

World Cancer Day - Platform Tamil

1.புற்றுநோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை அதிகரித்தல்

 2.ஆரோக்கியமான வாழ்க்கை முறை வாழ மக்களை ஊக்குவித்தல்

3.ஆரம்பநிலையிலேயே புற்றுநோயை கண்டறியும் வழிகளை முன்னெடுத்தல்

4.புற்றுநோய் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சமமான சிகிச்சை வாய்ப்புகளை வழங்க தூண்டுதல்

5.ஆராய்ச்சி மற்றும் மருத்துவத்துறையில் மேம்படுத்தப்பட்ட சிகிச்சைகளை கண்டறிதல் ஆகியவை உலக புற்றுநோய் தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

புற்றுநோயை தடுக்கும் வழிமுறைகள்

புற்றுநோயை முழுவதுமாக தடுக்க முடியாது என்றாலும் நம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் செய்வதன் (World Cancer Day) மூலமாக இதை குறைக்கலாம். இதற்கான வழிமுறைகளை பார்க்கலாம். 

1.ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றுதல்

2.புகையிலை மற்றும் புகைபிடிப்பதை முற்றிலும் தவிர்த்தல்

3.மது குடிக்கும் பழக்கத்தை குறைத்தல் அல்லது தவிர்த்தல்

4.மாசுபட்ட சுற்றுச்சூழலை தவிர்த்தல்

5.தினசரி உடற்பயிற்சி மேற்கொள்ளுதல்

6.வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கலாம்.

Latest Slideshows

Leave a Reply