World Chess Junior Championship 2025 : உலக செஸ் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றார் தமிழக வீரர் வெங்கடேஷ்

உலக ஜூனியர் (20 வயதுக்குட்பட்டோர்) செஸ் சாம்பியன்ஷிப் தொடரானது ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மான்டிநிக்ரோவில் உள்ள பெட்ரோவாச் நகரில் நடைபெற்றது. இந்த தொடரில் ஓபன் பிரிவில் 63 நாடுகளைச் சேர்ந்த 12 கிராண்ட்மாஸ்டர்கள் உள்பட 157 வீரர்கள் பங்கேற்றனர். இந்த தொடரின் இறுதி போட்டியில் இந்திய வீரர் பிரணாவ் வெங்கடேஷ் (World Chess Junior Championship 2025) மற்றும் ஸ்லோவன்யா நாட்டை சேர்ந்த மாட்டிச்சை மோதினர்.

11 சுற்றுகள்

மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட உலக செஸ் ஜூனியர் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழகத்தை சேர்ந்த பிரணாவ் வெங்கடேஷ் 7 சுற்றில் வெற்றியும், 3 சுற்றில் டிரா என மொத்தம் ஒன்பது புள்ளிகளை பெற்றிருந்தார். இந்த சூழலில் கடைசி சுற்றான 11-வது சுற்றில் பிரணாவ் வெங்கடேஷ் டிரா செய்தாலே உலக செஸ் ஜூனியர் சாம்பியன் பட்டத்தை வென்று விடுவார் என்ற சூழ்நிலையில் மாட்டிச்சை எதிர்கொண்டார். வெள்ளை நிற காயுடன் இந்த போட்டியை தொடங்கிய (World Chess Junior Championship 2025) பிரணாவ் வெங்கடேஷ் முதலில் சில காய்களை இழந்தார். அதன் பிறகுதான் இது தனக்கு விரிக்கப்பட்ட வலை என மாட்டிச்சை புரிந்துகொண்டு தற்காப்பு ஆட்டத்தை கடைப்பிடித்தார். இதன் மூலம் 18-வது நகர்த்தலிலே போட்டியை டிரா செய்ய  இருவரும் ஒப்புக்கொண்டனர்.

பிரணாவ் வெங்கடேஷ் சாம்பியன் (World Chess Junior Championship 2025)

World Chess Junior Championship 2025 - Platform Tamil

போட்டியை டிரா செய்தாலும் மொத்தம் 10 புள்ளிகள் பெற்றதன் அடிப்படையில் பிரணாவ் வெங்கடேஷ் உலக செஸ் ஜூனியர் சாம்பியன்ஷிப் பட்டத்தை (World Chess Junior Championship 2025) கைப்பற்றினார். இந்தியாவின் செஸ் ஜாம்பவானான விஸ்வநாதன் ஆனந்த் நடத்தும் பெஸ்ட் பிரிட்ஜ் ஆனந்த் செஸ் அகாடமியில் பயின்று வரும் மாணவர்தான் பிரணாவ் வெங்கடேஷ். மேலும் இவருக்கு விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் தனிப்பட்ட முறையில் பயிற்சி அளித்திருக்கிறார். இந்த தொடரை முதல் முறையாக விஸ்வநாதன் ஆனந்த் 1987-ம் ஆண்டு வென்றுள்ளார்.

17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா சாம்பியன்

விஸ்வநாதன் ஆனந்த் அவர்களுக்கு பிறகு 2004-ம் ஆண்டு ஹரிகிருஷ்ணாவும், 2008-ம் ஆண்டு அபிஜித் குப்தாவும் உலக செஸ் ஜூனியர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று இருந்தனர். தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு உலக செஸ் ஜூனியர் சாம்பியன்ஷிப் பட்டத்தை (World Chess Junior Championship 2025) இந்திய வீரர் வென்றிருக்கிறார். உலக செஸ் ஜூனியர் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ள வெங்கடேஷ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் “தமிழ்நாடு செஸ் விளையாட்டில் தலைநகரமாக விளங்குகிறது என்பதை இந்த வெற்றியின் மூலம் மீண்டும் நிரூபனம் ஆகிவிட்டது” என்று பாராட்டியுள்ளார்.

விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டு

விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கடந்த சில காலமாக பிரணாவ் வெங்கடேஷ் தனது விளையாட்டில் அபாரமாக கவனம் செலுத்தி விளையாடி வருகிறார். தற்போது இந்த வெற்றியின் மூலம் மதிப்புக்குரிய உலக ஜூனியர் சாம்பியன் பட்டியலில் பிரணாவ் வெங்கடேஷ் (World Chess Junior Championship 2025) அவர்களும் இணைந்திருக்கிறார் என பாராட்டியுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply