World Cup Price Amount : உலக கோப்பையை வெல்லும் அணிக்கான பரிசுத்தொகை அறிவிப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட்

4வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்னும் இரண்டு வாரங்களில் இந்தியாவில் தொடங்கவுள்ளது. உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி முடிவடைகிறது. உலகக் கோப்பைத் தொடரில் மொத்தம் 10 அணிகள், 45 லீக் ஆட்டங்கள், 2 அரையிறுதிப் போட்டிகள் மற்றும் ஒரு இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இதற்காக பிரத்யேகமாக 10 மைதானங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

இந்திய அணி விளையாடவிருக்கும் 9 லீக் போட்டிகளும் வெவ்வேறு மைதானங்களில் நடைபெறும். இந்த உலகக் கோப்பையில் இந்தியாவின் முதல் போட்டி நமது சிங்கார சென்னையில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. அதன்பிறகு, அக்டோபர் 14-ம் தேதி அகமதாபாத் மைதானத்தில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி விளையாடுகிறது.

டிக்கெட் விற்பனை

இந்நிலையில் உலக கோப்பை தொடருக்கான டிக்கெட் விற்பனை கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. அதேபோல் இந்திய அணி அணியும் ஜெர்சியும் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல், உலக கோப்பை தொடருக்கு அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. உலக கோப்பை தொடருக்கான அணிகளையும் அறிவித்துள்ளனர்.

World Cup Price Amount

இந்நிலையில் உலக கோப்பை தொடரில் வெற்றி பெறும் அணிகளுக்கான பரிசுத் தொகை (World Cup Price Amount) வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.33.18 கோடி பரிசுத்தொகையாக (World Cup Price Amount) வழங்கப்படும்.

அதேபோல், இறுதிப் போட்டியில் தோல்வியடையும் அணிக்கு ரூ.17.5 கோடியும், அரையிறுதியில் தோற்கும் அணிக்கு ரூ.6.64 கோடியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply