World Cup Test Championship போட்டியில் விளையாடுவதற்கு ஆர்வமாக இருந்தேன்…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் உலகின் நம்பர் ஒன் பவுலர் அஸ்வின் தேர்வு செய்யப்படவில்லை. இது நம் நாட்டு ரசிகர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அவர் இல்லாமல் சென்று விளையாடி இந்திய அணியாளும் பெரியதாக வெற்றி பெற முடியவில்லை. இதுகுறித்து முதல் முறையாக மனம் திறந்த அஸ்வின் தேர்வு செய்யப்படவில்லை என்றால் என்ன செய்யலாம் என அனைத்திற்கும் தயாராக இருந்ததாக கூறியுள்ளார்.

அனுபவம் மிக்க வீரர் :

இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு இணையான அனுபவத்தை கொண்டுள்ள வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆவார். கடந்த 2011 ஆம் ஆண்டில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் அனைத்து விதமான கிரிக்கெட்டுகளிலும் விளையாடி அனுபவம் கொண்டவர். அதேபோல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் சவுத் ஆப்பிரிக்கா என அனைத்துவித மைதானங்களிலும் எப்படி பந்து வீச வேண்டும் என்று அனைத்து விதமான அனுபவங்களையும் கொண்டவர் அஸ்வின். அப்படி திறமை மிக்க சுழல் பந்துவீச்சாளரை இந்திய அணி ஏன் பயன்படுத்தவில்லை என்ற கேள்வி எழுந்தது.

அஸ்வின் இடம் பெறாமல் போனதால் ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் வசதியாக போனது. இதை நிரூபிக்கும் விதமாக நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் தன்னுடைய முக்கியத்துவத்தை அஸ்வின் அவர்கள் இந்திய அணிக்கு நிரூபித்து காட்டியுள்ளார்.

தவறுகளை திருத்த வேண்டும் :

இதுகுறித்து முதல் நாள் ஆட்டம் முடிவடைந்த பிறகு அஸ்வினிடம் பேசும்போது வாழ்க்கையில் சரி கிரிக்கெட் ஆனாலும் சரி அனைவரும் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்து ஆக வேண்டும். சில நேரங்களில் தோல்விகளை சந்திக்கும் போது வாடாமல் மீண்டும் எழுந்து போராட வேண்டும் அப்பொழுதுதான் நல்ல நல்ல வாய்ப்புகள் நம்மைத் தேடி வரும். நாம் தோற்கும் போது யாரையும் குற்றம் சாட்டலாம் என இருந்து விடக்கூடாது. என்னைப் பொறுத்தவரை தோல்விகளில் இருந்து தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது எனக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நான் அணியில் இருந்தால் கண்டிப்பாக ஏதாவது செய்திருப்பேன். ஏனென்றால் ஏற்கனவே ஒருமுறை இறுதிப் போட்டிக்கு சென்றும் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. இதனால் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் இறுதிப் போட்டியில் நாங்கள் தகுதி பெற்று கோப்பையை கண்டிப்பாக வெல்வோம் எனக் கூறியுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply