World Rapid Chess Championship : உலக ரேபிட் செஸ் சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி

அமெரிக்காவில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான உலக மகளிர் ரேபிட் செஸ் போட்டியில் இந்தோனேசியா வீராங்கனை ஐரீன் சுகந்தரை வீழ்த்தி இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் (World Rapid Chess Championship) வென்று அசத்தியுள்ளார். இதற்கு முன்பு கடந்த 2019-ம் ஆண்டு ஜார்ஜியாவில் நடைபெற்ற உலக அதி வேக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியிலும் கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

உலக அதி வேக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் (World Rapid Chess Championship)

இந்த உலக அதி வேக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு போட்டியாளருக்கும் மொத்தம் 15 நிமிடம் மட்டுமே வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 10 வினாடிகள் மட்டுமே அளிக்கப்படும். இதனால் இந்த போட்டியில் பங்கேற்பதற்கு விரைவாக சிந்திக்கும் ஆற்றலும், வேகமாக காய்களை நகர்த்தும் திறனும் வேண்டும். இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியானது நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி 11 புள்ளிகளில் 8.5 புள்ளிகள் பெற்று இந்தோனேஷியா வீராங்கனை ஐரீன் சுகந்தரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் (World Rapid Chess Championship) வென்றுள்ளார். இவருக்கு சர்வதேச அளவில் செஸ் போட்டியில் சாதனை படைத்த விஸ்வநாதன் ஆனந்த், ஜூடித் போல்கர், சூசன் போல்கர், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, குகேஷ் மற்றும் இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா போன்ற பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

யார் இந்த கொனேரு ஹம்பி

கொனேரு ஹம்பி ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த இந்திய சதுரங்க வீராங்கனை ஆவார். ஹம்பியின் திறமையை அவரது தந்தை சிறு வயதில் அடையாளம் கண்டார். கொனேரு ஹம்பி கடந்த 2002 ஆம் ஆண்டு 15 வயதில் ‘கிராண்ட் மாஸ்டர்’ பட்டத்தை வென்று சதுரங்க வரலாற்றில் மிக இளம் வயதில் பட்டம் வென்ற வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்தார். அதுமட்டுமல்லாமல் ஆண்களின் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற முதல் இந்திய பெண்மணி கொனேரு ஹம்பி ஆவார். மேலும் இவர் 2006 ஆம் ஆண்டு தோஹாவில் நடைபெற்ற ஆசிய சதுரங்க விளையாட்டு போட்டியில் (World Rapid Chess Championship) இந்தியாவின் சார்பாக கலந்துகொண்டு தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

கொனேரு ஹம்பிக்கு வழங்கப்பட்டுள்ள விருதுகள்

சதுரங்க விளையாட்டில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியதற்காக 2003 ஆம் ஆண்டு இந்திய அரசு கொனேரு ஹம்பிக்கு விளையாட்டு துறையின் மிக உயரிய விருதான அர்ச்சுனா விருது (World Rapid Chess Championship) அளித்தது. மேலும் 2007 ஆண்டு இந்தியாவின் உயர்ந்த குடிமை விருதான பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply