World Record Was Held By Nellai College Girls : நெல்லையில் 5000 மாணவிகள் நடத்திய உலக சாதனை நிகழ்வு

World Record Was Held By Nellai College Girls :

இன்னும் சில கிராமங்களில் மாதவிடாய் காரணமாக பல பெண்கள் பல்வேறு அவமானங்களை சந்தித்து வருகின்றனர். எனவே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உலக சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நெல்லை பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி மற்றும் அக்னி சிறகுகள் என்ற அமைப்பு இணைந்து பெண்களிடையே மாதவிடாய் நிகழ்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவிகளை கொண்டு மாதவிடாய் சின்னத்தை வடிவமைக்கும் உலக சாதனை (World Record Was Held By Nellai College Girls) முயற்சி நடைபெற்றது. மாதவிடாய் என்பது ஒரு மாதத்திற்கு மூன்று நாட்கள் பெண்களின் உடலில் இருந்து கழிவுகள் இரத்தப்போக்காக வெளியேறும் காலம்.

மாதவிடாய் காலத்தின் போது பெண்களுக்கு வயிற்று வலி, உடல் சோர்வு, பசியின்மை போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதவிடாய் காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக கிராமப்புறங்களில் மாதவிடாய் என்பது பெரும் தீட்டாகவே பார்க்கப்பட்டது. அந்த சமயங்களில், பெண்கள் வெளியே செல்லவோ, யாரையும் பார்க்கவோ கூடாது என பெற்றோர்களே கடுமையான நிபந்தனைகளை விதிப்பார்கள். இந்நிலையில், மாதவிடாய் பெண்களின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் மாதவிடாய் என்ற தடையை உடைத்துக்கொண்டு பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி உலகில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர்.

குறிப்பாக செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பும் அளவிற்கு பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகின்றனர். ஆனால், சில கிராமங்களில் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் பல பெண்கள் பல்வேறு அவமானங்களை சந்தித்து வருகின்றனர். எனவே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நேற்று ராணி அண்ணா கல்லூரியில் இந்த உலக சாதனை நிகழ்ச்சி (World Record Was Held By Nellai College Girls) மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி, கல்லூரி மைதானத்தில் திரண்ட 5000 மாணவிகள், மாதவிடாயின் போது ஏற்படும் ரத்தப் போக்கை வழிவதை சித்தரிக்கும் வகையில் குழுவாக அமர்ந்தனர்.

இந்த உலக சாதனை முயற்சிக்கான நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். அப்போது பேசிய கல்லூரி பேராசிரியர்கள், மாதவிடாய் காலத்தில் வேலைக்கு செல்லும் அனைத்து பெண்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் அல்லது பணிபுரியும் இடத்தில் ஓய்வெடுக்க வசதி செய்து தர வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் நாப்கின் இயந்திரங்களை கட்டாயமாக்க வேண்டும். மாதவிடாய் தீட்டு இல்லை என்ற செய்தியை பொது இடங்களில் வெளியிட வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து மாணவிகள் கூறும்போது, ​​அந்த காலத்தில் மாதவிடாய் என்றாலே  தீட்டு என கருதி பெண்களை வீட்டுக்குள் அடைத்து வைப்பார்கள். ஆனால் தற்போது பெண்கள் மாதவிடாய் தீட்டல்ல என்பதை நிரூபித்து பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர். பெண்கள் மத்தியில் மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று இந்த உலக சாதனை முயற்சியை (World Record Was Held By Nellai College Girls) மேற்கொண்டுள்ளோம் என்று பெருமிதத்துடன் கூறினர்.

Latest Slideshows

Leave a Reply