World Test Championship Final: டெஸ்ட் சாம்பியன்ஷிப் தான் முக்கியம்…உடனே இங்கிலாந்து பறந்த இந்திய வீரர்கள்..!

ஐ,பி,எல் இறுதிப்போட்டி சமீபத்தில் முடிவடைந்த உடன் இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்து நாட்டிற்கு  புறப்பட்டு சென்றுள்ள நிகழ்வு அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை ஐந்து  விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சிறப்பான வெற்றியை பெற்றதோடு , 5 வது முறையாக கோப்பையையும் வென்று அசத்தியது. இதனால் csk வீரர்கள் இரவு முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதே போன்று ஐ.பி.எல் கோப்பையை எடுத்துக் கொண்டு கோவிலுக்கு csk நிர்வாகமும் வீரர்களும் பறந்து சென்று கொண்டு இருந்தனர். இதனால் கொண்டாட்டம் அடுத்தக்கட்டத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் டெஸ்ட் உலககோப்பை  இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய வீரர்கள் அனைவரும் ஆட்டத்தை  நிறுத்தி வைத்துவிட்டு, சீக்கிரமாக இங்கிலாந்துக்கு விமானம் ஏறியுள்ளனர். ஏற்கனவே அடுத்த  சுற்றுக்கு செல்லாத வீரர்கள்  விராட் கோலி தலைமையில் இங்கிலாந்தில் பயிற்சியை தொடங்கினர். இதையடுத்து குவாலிஃபையர் 2வது போட்டி முடிவடைந்த பின் ரோகித் சர்மா தலைமையில் இஷான் கிஷான் மற்றும் ஜெய்ஸ்வால் போன்ற இந்திய வீரர்கள் பலரும் இங்கிலாந்து சென்று சேர்ந்தனர்.

இந்த நிலையில் இறுதி போட்டிக்கு பின் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளில் விளையாடிய டெஸ்ட் அணி வீரர்கள் நேற்று இரவே இங்கிலாந்துக்கு புறப்பட்டுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து அஜிங்கியா ரஹானே மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும், குஜராத் அணியில் இருந்து சுப்மன் கில், பரத்,  முகமது ஷமி ஆகியோரும் புறப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்திய அணி வீரர்கள் அனைவரும் இங்கிலாந்து சென்று அடைந்தனர். ஒரு நாள் கூட ஓய்வின்றி இந்திய வீரர்கள் சீக்கிரமாக பயணம் மேற்கொண்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறது. சென்ற டெஸ்ட் உலககோப்பையில் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி தோற்றது குறிப்பிடத்தக்கது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்திய அணி மிக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இன்னொரு பக்கம் ஆஸ்திரேலிய அணி 2 மாதத்திற்கு மேலாக இங்கிலாந்திலேயே தங்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் அனுபவ வீரர் ஸ்டீவ் ஸ்மித் இங்கிலாந்து நாட்டின் ஆடுகளங்களில் சிறப்பாக விளையாட உள்ளூர் கிரிக்கெட் போன்ற போட்டிகளில் விளையாடி கொண்டு இருகிக்கிறார். சம பலம் பொருந்திய இரு அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மோதுவது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply