World Test Championship : இறுதிப் போட்டிக்கு செல்லுமா இந்தியா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் (World Test Championship) இந்திய அணி தற்போது முதலிடத்தில் உள்ளது. இந்தியா 68.5% உடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 62.50% உடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

World Test Championship - இந்தியா முதல் இடம் :

அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும் இந்திய அணி தற்போது முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதன் மூலம் கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அபார சாதனை படைத்துள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் (World Test Championship) புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே இறுதிப்போட்டியில் விளையாடும். இந்தியா இப்போது 2023-25 ​​சுழற்சியில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா எத்தனை தொடர்களில் விளையாடும்? அதில் இந்தியா எந்த அளவுக்கு வெல்ல வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம். இந்திய அணி இன்னும் பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. தற்போது உள்ள புள்ளி பட்டியலின் படி இந்திய அணி அடுத்து வரவுள்ள போட்டிகளில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றால் போதுமானது. அதிகபட்சமாக 7 டெஸ்ட் போட்டிகளில் பெற வேண்டும்.

இதில், வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா விளையாடுகிறது. இந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளும் இந்தியாவில் நடைபெறுவதால் இந்தியா வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் அடுத்த 5 டெஸ்ட் போட்டிகளிலும் பிரச்சனை உள்ளது. ஏனெனில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அங்கு 5 போட்டிகளில் விளையாடவுள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு முறை டெஸ்ட் தொடரை இந்தியா வென்றுள்ளது. இதனால் இம்முறை இந்தியாவை வீழ்த்த ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி டிரா செய்து வெற்றி பெற வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு டெஸ்டில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் இந்தியா விளையாட முடியும். தற்பொழுது நடந்து முடிந்துள்ள டெஸ்ட் தொடரில் (World Test Championship) இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியுள்ளது. அணி கேப்டன் ரோகித் சர்மா வெற்றிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.

கிரேம் ஸ்வான் :

இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸை விட ரோஹித் சர்மா சிறந்த கேப்டன் இல்லை என்று அவர் கூறுகிறார். மேலும், இந்திய அணியின் வெற்றிக்கு ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி காரணமல்ல, வேறு ஏதோ காரணம் என்கிறார். இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. அதன் பிறகு தொடர்ந்து நான்கு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது. இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகித்தனர். இந்திய அணியின் வெற்றிக்கு அவர்கள்தான் காரணம் என்கிறார் ஸ்வான்.

இது குறித்து பேசிய ஸ்வான், “ரோஹித் சிறந்த கேப்டன் என்று நான் நினைக்கவில்லை, ஏனெனில் அவரது பந்து வீச்சாளர்கள் அவருக்காக தந்திரமாக விளையாடினர். ரோஹித் தனது ஆயுதக் களஞ்சியத்தில் சரியான ஆயுதங்களைப் பெற்றுள்ளார் என்று நான் நினைக்கிறேன்”. ஸ்வான் இந்திய பந்துவீச்சாளர்களை ஆயுதங்கள் என்று குறிப்பிட்டார். “அவரது பந்துவீச்சாளர்கள் ரோஹித் ஷர்மாவுக்காக வந்து கடைசி நான்கு டெஸ்டில் வெற்றி பெற கோதாவில் இணைந்தனர். அவர்கள் முதல் போட்டியில் அதை செய்யவில்லை, ஆனால் கடைசி நான்கில் அதை செய்தார்கள்” என்று ஸ்வான் கூறினார்.

Latest Slideshows

Leave a Reply