World's Best Sandwiches: உலகளாவிய அங்கீகாரம் இந்திய உணவான வடா பாவிற்கு கிடைத்துள்ளது

உலகின் மிகச்சிறந்த 50 சாண்ட்விச் பட்டியலில் இந்தியாவின் வடா பாவ் (World's Best Sandwiches)

Taste Atlas என்ற உலகளாவிய பயண வழிகாட்டி சமீபத்தில் வெளியிட்ட உலகின் மிகச்சிறந்த 50 சாண்ட்விச் பட்டியலில் (World’s Best Sandwiches) இந்தியாவின் வடா பாவ் இடம் பெற்றுள்ளது. உலகின் மிகச்சிறந்த 50 சாண்ட்விச் பட்டியலில் 4.3 ரேட்டிங் பெற்று இந்தியாவின் வடா பாவ் 19-வது இடத்தைப் பிடித்துள்ளது.

உலகின் சிறந்த சாண்ட்விச்களின் பட்டியலில் இந்தியாவின் வடா பாவ் இடம் பெற்றிருப்பது இந்திய நாட்டிற்கும் மற்றும் இந்தியர்களுக்கும்   பெருமையான விஷயமாகும்.

உலகின் மிகச்சிறந்த 50 சாண்ட்விச் பட்டியலில்  4.6 ரேட்டிங்குடன் வியட்நாம் சாண்ட்விச் பான் மி  மற்றும் துருக்கியின் டாம்பிக் டோனர் முதலிடத்தைப் பிடித்துள்ளன. மோன்ட்ரியலின் ஸ்மோக்ட் மீட், லெபனானின் ஷவர்மா, மற்றும் இறால் ரோல்ஸ் போன்ற உணவுகள்  உலகின் மிகச்சிறந்த 50 சாண்ட்விச் பட்டியலின் முதல் 10 இடங்களுக்குள் உள்ளது.

இந்தியாவின் வடா பாவ் - ஒரு குறிப்பு

இந்தியாவின் பொருளாதார தலைநகரான மும்பையில் மக்கள் பெரும்பாலும் சாலையோரத்தில் உள்ள கடைகளில் சாப்பிடுவதையே விரும்புகிறார்கள்.  அப்படிப்பட்ட மக்களின் பிடித்தமான காலை உணவு என்ன என்று கேட்டால் அதில் பெரும்பாலானவர்கள் வடா பாவையே காலை உணவாக விரும்புவதாக கூறுவார்கள். இதன் நாஊறும் சுவை காரணமாக  இது பலரின் விருப்பத்திற்குரிய உணவாக இருக்கிறது.

மும்பையில் உள்ள  மக்கள் அனைவருமே வீட்டில் அமர்ந்து நிம்மதியாக உணவு அருந்தக் கூட நேரமின்றி  தங்களது வேலைக்காகவும், தொழிலுக்காகவும்  அவசர கதியில் இயங்கி கொண்டிருப்பார்கள். இதனால் பெரும்பாலும் மக்கள் சாலையோரத்தில் உள்ள கடைகளில் அவசரமாக சென்று சாப்பிடுவதையே வழக்கமாக கொண்டுள்ளார்கள் மற்றும்   விரும்புகிறார்கள். எனவே மும்பையில் உள்ள ஒவ்வொரு மூலை முடுக்கிலும் வடா பாவ் விற்பனை நடந்து கொண்டிருக்கும். தற்போது மகாராஷ்ட்ராவில் மட்டுமல்லாமல் வடா பாவ் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கிறது.

பிரபலங்களின் பிடித்த உணவு வடா பாவ்

இந்திய பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் ஷாருக் கான் வடா பாவ் மீதான தங்கள் அன்பை பலமுறை நேர்காணல்  நிகழ்வுகளில் வெளிப்படுத்தியுள்ளார்கள்.  குறிப்பாக பாலிவுட்டின் பாட்ஷா ஷாருக் கான் ஒருமுறை ஒரு நேர்காணல் ஒன்றில்தான்  சினிமாவில் நடிக்க முயற்சித்து கொண்டிருந்த காலத்தில் பசியை கட்டுபடுத்த வடா பாவ் சாப்பிட்டு வந்ததாக கூறியுள்ளார். இதே போல்  இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா வடா பாவ் மீதான தனது  அன்பை பலமுறை வெளிப்படுத்தியுள்ளார்.

வடா பாவின் எளிமையான செய்முறை

வடா பாவை செய்வதற்கு உருளைக் கிழங்கு, கடலை மாவு,  மிருதுவான பன் மற்றும் பன்னிற்குள் வைக்கும் சட்னி  போன்ற குறைந்தபொருட்கள் போதுமானது. கடலைமாவிற்குள் நன்கு மசித்த உருளைக் கிழங்கை திணித்து எண்ணெயில் பொறிக்க வேண்டும். இந்த வடாவை மிருதுவான பன்னிற்குள் வைத்து சட்னி ஊற்ற வேண்டும். சுவையான  வடா பாவ் ரெடி.  இந்த எளிமையான செய்முறை பலரை கவர்ந்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply