World's First AI Software Engineer : உலகின் முதல் AI மென்பொருள் இன்ஜினியர் Devin அறிமுகம்

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிறுவனமான காக்னிஷன் (Cognition) ஆனது டெவின் என்ற உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) மென்பொருள் என்ஜினீயரை 13/03/2024 அன்று  அறிமுகம் செய்துள்ளது. மின்னல் வேகத்தில் AI வளரும் நிலையில், கோடிங் போடும் புதிய வகை  AI Tool இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஏஐ காரணமாக வேலையிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுவரை புது புது அம்சங்களுடன் AI தொழில்நுட்பத்தை பல்வேறு முன்னணி நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வரும் நிலையில், உலகின் முதல் முறையாக AI தொழில்நுட்பத்தில் இயங்கும்  AI  மென்பொருள் இன்ஜினீயரை காக்னிஷன் (Cognition) அறிமுகம் செய்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு (AI) மென்பொருள் இன்ஜினியருக்கு ‘டெவின்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுவரை AI பாட்கள், டெக்ஸ்ட், இமேஜ், ஆடியோ, வீடியோ போன்றவை ஜெனரேட் செய்து வந்த நிலையில், தற்போது ஒரு வித்தியாசமான புதிய பணியை மேற்கொள்ளும் வகையில் Cognition நிறுவனம்  டெவின்  AI மென்பொருள்  இன்ஜினீயரை உருவாக்கியுள்ளது.

டெவின் ஏஐ மென்பொருள் இன்ஜினியர் ஒரு அயராத, திறமையான டீம்மேட், மனித பொறியாளர்களுடன் இணைந்து பணியாற்றும் வகையில் மற்றும் மனித பொறியாளர்களுடன் இணைந்து கட்டமைக்க அல்லது மனித பொறியாளர்கள் மறுபரிசீலனை செய்யும் பணிகளை சுயமாக செய்து முடிக்கும். அதன்படி, டெவின் மூலம், பல்வேறு சிக்கலான பொறியியல் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்த முடியும்.மற்ற AI tools போலல்லாமல், இது தனித்து நிற்கிறது, ஏனெனில் இது குறியீட்டு பரிந்துரைகள் அல்லது தன்னியக்க பணிகளை மட்டும் வழங்காது ஒரு முழு மென்பொருள் திட்டத்தையும் சுயாதீனமாக எடுத்து முடிக்கும்.

டெவினின் சிறப்புக்கள் : World's First AI Software Engineer

ஒரு மனிதன் செய்ய வேண்டிய அனைத்து வேலையையும் டெவினால் செய்ய முடியும். Coding எழுத இதனை பயன்படுத்தலாம். புரோகிராம் கோடில் உள்ள பக்-கினை (Bug) அடையாளம் கண்டு அதை ஃபிக்ஸ் செய்யவும் உதவும். தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை ப்ராம்ப்ட் (Prompt) செய்தால், அதன் ரிசல்ட்டை சில நிமிடங்களில் பயனாளர்களுக்கு டெவினால் வழங்க முடியும். அறிமுகமில்லாத தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பயனாளர்கள் கற்றுக் கொள்ள உதவும்.

கோட்பேஸ்களில் உள்ள பிழைகளைத் டெவின் தானாகக் கண்டுபிடித்து சரி செய்யும்.தற்போதைய அப்டேட் வழங்குவது, டிசைன் சாய்ஸ்களில் இணைந்து பணியாற்றுவது, ஆப்ஸ்கள் வடிவமைப்பு, கோடிங்கில் உள்ள Bug-ஐ கண்டுபிடித்து, அதனை சரி செய்வது, புதிய புரோக்ராமிங் கோடிங் செய்வது என பல்வேறு என்ஜினீயர் சார்ந்த பணிகளை மேற்கொள்ள டெவின்  உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5-10 நிமிடங்களில் டெவினைப் பயன்படுத்தி முழு வலைத்தளங்களையும் அடிப்படை விளையாட்டுகளையும் உருவாக்க முடியும்.

சவாலான பணிகளையும் இந்த ஏஐ டூல் மேற்கொள்ளும்.இன்ஜினியர் பணிக்கான நேர்காணலில் டெவின் தேர்ச்சி பெற்றுள்ளது மற்றும்  பல்வேறு இன்ஜினியரிங் டாஸ்குகளை வெற்றிகரமாக முடித்துள்ளது என Cognition நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, டெவின் என்ஜினீயர்  தானியங்கு முறையில் இயங்குவது மட்டுமின்றி மனித இன்ஜினியர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில பயனர்களின் பயன்பாட்டுக்கு டெவின் வெகு விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Latest Slideshows

Leave a Reply